.

Monday, March 11, 2013

மகத்தான மக்கள் தலைவர் சாவேஸ்




நாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர்.
ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகாலை 4:30 இற்கு நின்று போனது.

ஏழைக் குடும்பத்திலிருந்து 1971 ஆம் ஆண்டு இராணுவவீரராக தனது வாழ்வை ஆரம்பித்த சவேஸ், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரானார். 1999 ஆண்டு வெனிசூலா நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார்.
அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு எதிராக அரசியலை முன்னெடுப்பது சாத்தியமானதும் வெற்றிகரமானதும் என்றுக் உலகத்திற்கு தனது செயற்பாடுகள் ஊடாக அறிவித்த சாவேஸ் இந்த நூற்றாண்டுன் மாமனிதர்களுள் ஒருவராக உயர்ந்தார்.

பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு எதிராக தனது நாட்டின் தேசியப் பொருளாதாரத்தை வளர்த்த சாவேஸ் தனது 14 வருட ஆட்சியில் வெனிசூலாவை பல ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்தியவர்.

அமரிக்க அரசு வாய்கிழியக் கூக்குரல்போடும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ ஊடாக தெரிவானவரே ஹுகோ சவேஸ். 2002 ஆம் ஆண்டு சவேசின் ஆட்சிக்கு எதிராக சதிப்புரட்சியை அமரிக்க அரசு திட்டமிட்டது. இராணுவ அதிகாரிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பெரும் அமரிக்க சார்பு பணமுதலைகள், வெனிசூலாவில் இன்றும் ‘சுதந்திரமாக’ செய்திவெளியிடும் அமரிக்க ஊடகங்கள் ஆகியவற்றின் துணையோடு இச்சதிப் புரட்சி திட்டமிடப்பட்டது. சவேஸ், ஜனாதிபதி இல்லத்தின் கூரையிலிருந்து ஹெலிக்கொப்படர் வழியாகச் சதிகாரர்களால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிச்சென்றார்..

சதிப்புரட்சியைக் கேள்வியுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி வசிப்பிடத்தை நோக்கிப் படையெடுத்தனர். சதிகாரர்கள் கைதாகினர். அன்றய தினமே கூடியிருந்த மக்கள் மத்தியில் தப்பிச்சென்ற அதே ஹெலிகொப்படரில் சவேஸ் வந்திறங்கினார்.

அதே ஆண்டு இறுதியில் மற்றொரு சதிப்புரட்சி தோல்வியடைந்தது.

இவற்றிற்கெல்லாம் சளைக்காத சவேஸ், எண்ணை உற்பத்தியில் அரசு பெற்றுக்கொண்ட பணத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். அனைத்து எண்ணை விளை நிலங்களையும் தனியாரின் கரங்களிலிருந்து பறித்தெடுத்த சவேஸ் அரசு அவற்றைத் தேசிய மயமாக்கியது. வங்கிகள் உட்பட ஆயிரம் வரையான நிறுவனங்கள் தேசிய மயமாகின. அபிவிருத்தி என்ற பெயரில் பல்தேசிய நிறுவனங்கள் பயணம் செய்வதற்கு போக்குவரது வசதி செய்யும் உலக அரசுகளின் மத்தியில் மக்களின் உணவு, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் அரச பணம் செலவிடப்பட்டது.

அமரிக்காவின் இருதயத்தில் குடிகொண்டிருக்கும் உலகவங்கி தனது அறிக்கையில் ஒப்புதல் வழங்குவது போல 2003 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வறுமை 50 வீதத்தால் வீழ்சியடைந்துள்ளது. அதேவேளை பாடசாலைகளதும் கல்லூரிகளதும் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது.

அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக தென்னமரிக்க நாடுகளின் கூட்டமைப்பு சவேசின் முயற்சியினாலேயே உருவாக்கப்பட்டது. சாவேஸ் ஏகாதிபத்திய்க எதிர்ர்பு முகாமிற்கு வழங்கிய நம்பிக்கை அவருக்கு எதிரான சதிவலைகளை உலகம் முழுவதும் உருவாக்கியது. எல்சல்வடோரின் அதிபரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட போது அவருக்கு எதிரான கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக நிக்கரகுவா புரட்சித் தலைவர் டானியல் ஒட்டேகா தெரிவித்திருந்தார்.

சாவேசை நச்சூட்டி புற்று நோயைத் தோற்றுவித்தது அமரிக்க அரசே என சாவேசிற்குப் பின்னர் தேர்தல்வரை நாட்டைப் பொறுப்பேற்றுள்ள துணை அதிபர் மதூரோ அறிவித்துள்ளார்.

தமது அரசுகளுக்கு அடிபணிய மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு யூரேனியம் கலந்த பரிசுப்பொருட்களை வழங்கிக் கொலை செய்தத்காக பிரஞ்சு உளவுத்துறை மீது 90 களில் குற்றம்சுமத்தப்பட்டது. பிரஞ்சுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சார்ள்ஸ் பஸ்குவா என்பவரின் செயலாளர் முன்வைத்த இக் குற்றச்சாட்டு பின்னதாக நிறுவப்படவில்லை.

வெனிசூலா சுதந்திரப் போராட்ட தியாகியான சிமோன் பொலிவாரின் பெயரில் சாவேசின் தேசிய வாத நடவடிக்கைகள் பெயரிடப்பட்டன. சவேசைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அதனை பொலிவாரியன் புரட்சி என அழைத்தனர்.
உலகின் எண்ணைவள நாடுகளில் நான்காவது இடத்தை வகிக்கும் வெனிசூலாவின் பதின்னான்கு வருட அதிபர் சாவேஸ் யார், அவரின் அரசியல் என்ன என்பது இன்று மீள்பரிசீலனை செய்யபடுவது அவசியம்.

உலகின் பெரும்பாலான இடதுசாரிகள் சாவேசை சோசலிஸ்ட் என்கிறார்கள். 21 ஆம் நூற்றாண்டின் சோசலிச அரசிற்கான முன்னுதாரணம் சாவேசின் அரசு என்கிறார்கள்.

உலகின் எண்ணைவழ நாடுகள் பெரும்பாலானவற்றில் எண்ணை வளம் அந்த நாடுகளின் சொத்துக்க்ளாகவே காண்ப்பட்டன. அச்சொத்துக்களை கையகப்படுத்தியிருந்த தனியாரிடமிருந்து அமரிக்கா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மூலதனமாக்கிக்கொண்டன. சொத்துக்களை வைத்திருத உள்ளூர் வாசிகள் மன்னர்களானார்கள். குவைத், சவுதி அரேபியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளில் மன்னராட்சி வடிவங்களே காணப்பட்டன.
வெனிசூலாவிலும் சவேசின் ஆட்சிக்கு முன்னர் இதே நிலைமையே காணப்பட்டது. எண்ணை வளம் மூலதனமாக அன்றி சொத்துக்களாக பெரு நில உடமையாளர்களிடம் காணப்பட்டது. சனத்தொகையில் 6 வீதமானவர்களே இச் சொத்தைக் கையிருப்பில் வைத்திருந்தனர்.

அமரிக்காவின் பெற்றோலியத் தேவையின் 14 வீதத்தை பூர்த்திசெய்யும் வெனிசூலாவின் எண்ணை வளத்தை தேசிய மயமாக்கிய சவேசின் நடவடிக்கை, எண்ணை வளம் வெறுமனே சொத்து என்ற நிலையிலிருந்து மூலதனம் என்ற நிலைக்குச் மாற்றமடைய வழிவகுத்தது. சொத்துக்களை மூலதனமாக்கி நாட்டைச் சுரண்டிய அன்னியத் தரகர்களை அங்கிருந்து விரட்டியடித்தது.

இதனால் வெனிசூலாவில் தேசிய உற்பத்தி பாய்ச்சல் நிலை வளர்ச்சியடைந்தது. தொழில் வளர்ச்சி அதிகரித்தது. எண்ணை உற்பத்தியோடு உப தொழில்கள் தோன்றின. இதனால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவாகியது. இத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாகவே ஹூகோ சவேஸ் திகழ்ந்தார்.

தவிர, எண்ணை மூலதனத்திலிருந்து தோன்றிய தேசிய முதலாளித்துவம் வெனிசூலாவின் குறிப்பான சூழல். உலகில் ஏனைய நாடுகளுக்குப் பொருத்தமற்றது. இதனால் சவேசின் ஆட்சி வடிவத்தை 21 ஆம் நூற்றாண்டின் வெனிசூலா தேசியம் என்று வேண்டுமானால் அழைக்கலாம். பலர் கருதுவது போன்று 21 ஆம் நூற்றாண்டின் சோசலிசம் அல்ல.

இன்று  தேசிய முதளாளித்துவத்தின் வளர்ச்சி உறுதியற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

 சவேசின் மரணத்தின் வலி மக்கள் மத்தியிலிருந்து நீங்கும் முன்னமே பல்தேசிய ஊடகங்கள்  அந்த நாட்டின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூற ஆரம்பித்துவிட்டன. இனி அமரிக்காவுடன் ‘நல்லுறவை’ ஏற்படுத்துவது குறித்து பிபிசி ஏபிசி போன்ற ஊடகங்கள் துயர் பகிர ஆரம்பித்துவிட்டன.

இந்த நிலையில் அமரிக்கா உட்பட்ட ஏகபோகங்களின் தொடர்ச்சியான அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீண்டகாலத்திற்குத் தாக்குப்பிடிக்க இயலாத நிலையிலேயே உள்ளது. வெனிசூலாவின் தொழிலாளர் வர்க்கம் அணிதிரட்டப்படுவதும், பாராளுமன்ற வழிகளுக்கு அப்பால் சோசலிசப் புரட்சி நடத்தப்படுவதுமே அழிவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி




''கவனமாக இரு என் தோழனே, சாவேஸ்! அவர்கள் பயங்கரமான தொழில்நுட்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீ மிகவும் கவனம் இல்லாமல் இருக்கிறாய். என்ன சாப்பிடுகிறோம், எதைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள்... என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்... ஒரு சிறிய ஊசி குத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட உன் உடலில் விஷத்தை ஏற்றிவிடுவார்கள்'' - எனது அரசியல் ஆசான் பிடல் காஸ்ட்ரோ, அடிக்கடி இப்படி என்னை எச்சரித்துக் கொண்டே இருப்பார் என, சில ஆண்டுகளுக்கு முன்பே வாக்குமூலம் கொடுத்திருந்தார் மறைந்த வெனிசுலா அதிபர்  ஹியூகோ சாவேஸ். 
           “ஏழைகளின் ஏசு கிறிஸ்து” என்று ஈரானைச் சேர்ந்த ஒரு மதத்தலைவர் கடந்த மார்ச் 5 - ஆம் தேதி, வெனிசுலாவின் மகத்தான தலைவர் சாவேசுக்கு புகழஞ்சலி செலுத்தினார். லட்சக்கணக்கான மக்கள் கதறியழுது, வீதிகளில் திரண்டு விடிய விடிய அஞ்சலி செலுத்திய காட்சியையும் உலகம் முழுவதிலும் ஆயிரம் ஆயிரமாய் உழைக்கும் வர்க்க மக்கள் இரங்கல் ஊர்வலம் போனதையும் சமீப காலத்தில் இந்த உலகம் பார்த்திருக்கவில்லை.
         ஊதப்படும் செய்திகளின் வேகத்தில், ஒற்றைவரித் தகவல்களில் ஒன்றாக ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கென்னடி ஜூகானவ் எழுப்பிய சந்தேகமும் இடம்பெற்றது. “அதெப்படி லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 6 தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது? புற்றுநோய் பாதித்த ஆறு பேருமே தங்களது நாடுகளை சுதந்திரமாக, இறையாண்மை மிக்க தேசங்களாக வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதிக்கொண்டிருப்பவர்கள்”என்பதே கென்னடி ஜூகானவ்வின் வார்த்தைகள். சாவேஸ் புற்றுநோய்க்கு இரையாகிவிட்டார்; கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு புற்றுநோய் இருக்கிறது; மிகச் சமீபத்தில் பிரேசில் எனும் மாபெரும் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார் டில்மா ரூசெப். அந்நாட்டின் உழைப்பாளி மக்களது தலைவராக உயர்ந்திருக்கும் இந்தப் பெண்மணிக்கும் புற்றுநோய் இருப்பதாக கடந்த டிசம்பரில் தான் தெரியவந்திருக்கிறது; பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி - ஒரு மெட்டல் கம்பெனியின் தொழிலாளியாக இருந்து உழைப்பாளி மக்களின் தலைவராக - ஜனாதிபதியாக உயர்ந்தவர் லூலா. அவருக்கும் புற்றுநோய் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. அர்ஜெண்டினா ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் கிறிஸ்டினாவுக்கு தைராய்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது
.            இவற்றையெல்லாம் பட்டியலிட்டுள்ள கென்னடி ஜூகானவ், சாவேஸ் மரணம் குறித்து சர்வதேசக் கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். கடந்த மார்ச் 5 - ஆம் தேதி சாவேஸின் மரணத்தை அறிவித்தார் வெனிசுலாவின் துணை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ. “எங்கள் தேசத்தின் வரலாற்று எதிரிகள் தான் சாவேசுக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்குக் காரணமானவர்கள்; பாலஸ்தீன மக்களின் மகத்தான தலைவர் யாசர் அராபத்தையும் அவர்கள் இப்படித்தான் கொன்றார்கள்” என்று மதுரோ, அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமலே சொன்னபோதும், எங்களுக்கும் சாவேஸின் மரணத்திற்கும் சம்பந்தமில்லை என்று அடுத்த நிமிடமே அமெரிக்கா மறுப்பு வெளியிட்டது. வெனிசுலாவுடன் ஆக்கப்பூர்வ உறவைப் பேணுவோம் என்று ஒபாமா கூறினார்.
         1998ல் வெனிசுலாவில் அந்த மாபெரும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியான சாவேஸ் 14 ஆண்டுகளில் வெனிசுலாவை உலகம் போற்றும் நாடாக மாற்றிக்காட்டினார். அந்த 14 ஆண்டுகளும் எந்த நிமிடமும் அமெரிக்க நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏவின் சதித்திட்டங்களை, தாக்குதல்களை எதிர்நோக்கியே இருந்தார். எப்படியேனும் சாவேஸை ஒழித்துக்கட்டுவது என 14 வருடங்களாக குறிவைத்துக்கொண்டே இருந்தது சிஐஏ.ஏகாதிபத்திய அமெரிக்கா ஒரு போதும் சாவேஸ் போன்ற சுதந்திரத் தலைவர்களை சகித்துக் கொண்டதில்லை. காஸ்ட்ரோ எச்சரித்தது போல மிகச்சிறிய வாய்ப்பைக் கூட பயன்படுத்தி சாவேஸ் உடலில் புற்றுநோயை சிஐஏ விதைத்திருப்பதற்கான வாய்ப்பை இதுவரை எவரும் மறுக்கவில்லை.யாசர் அராபத்தின் உடலில் பொலோனியம் எனும் நச்சை, பாலஸ்தீனர்களுக்குத் தெரியாமல் செலுத்தியது இஸ்ரேல். புற்றுநோயை உருவாக்கும் நஞ்சுகளில் பொலோனியமும் ஒன்று. அது மெல்ல மெல்ல அவரைக் கொன்றொழித்தது. சா
வேசுக்கும் அப்படியே நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை பொலிவியாவின் ஜனாதிபதியும், சாவேசின் உற்ற நண்பருமான ஈவோ மொரேல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறார். “ஒருமுறை சாவேஸ் பொலிவியாவிற்கு வந்திருந்தார் . நானும் அவரும் சந்தித்துக் கொண்டபோது அவருக்கு காபி அருந்தக் கொடுத்தேன். சாவேஸின் மெய்க்காவலர்கள் அதைத் தடுத்தார்கள். அப்போது எனது சகோதரன் சாவேஸ் தனது மெய்க்காவலர்களிடம் ‘ஈவோவும் எனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுவார் என நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார்” - என ஈவோ மொரேல்ஸ், சாவேஸின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்பு கூறினார். சர்வதேச விசாரணை அவசியம் என்று இவரும் குரல் கொடுத்திருக்கிறார். 
         இதை அமெரிக்கா மறுத்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஊடகங்களின் உற்சாகக் கொண்டாட்டம், சாவேஸை அவர்கள்தான் கொன்றார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மார்ச் 5 - ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் ஏடும், வாஷிங்டன் போஸ்ட் ஏடும், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஏடும், டல்லாஸ் மார்னிங் நியூஸ் ஏடும், இன்னபிற அமெரிக்க ஏடுகளும், “வெனிசுலாவின் சர்வாதிகாரி ஒழிந்தான்” என்றும், “சாவேஸ் மரணம்: வெனிசுலாவில் தொலைந்த ஜனநாயகம் மீண்டும் மலரும்”என்றும், “கியூபாவின் டைனோசரை விட்டுவிட்டு, அதன் நண்பன் மரணமடைந்துவிட்டான்” என்றும் தலைப்பிட்டன; எழுதித்தீர்த்தன. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் இந்த செய்திகளின் சாராம்சத்தையே வாந்தியெடுத்தன. சாவேசோடு நின்றுவிடப்போவதில்லை ஏகாதிபத்தியத்தின் குறி; சாவேசோடு நின்றுவிடப் போவதில்லை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறி!
நன்றி : இணைய தளங்கள் 

No comments:

Post a Comment