.

Thursday, March 28, 2013


மகத்தான வெற்றியை நோக்கி NFTE….



        6வது தேர்தல் பிரச்சாரம் பிப்ரவரி மாதம் தொடங்கியபோது நாம் 40% வோட்டுகள் வாங்கி முதல் இடத்திற்கு வந்துவிடுவோம் என்று உறுதியாக நம்பினோம்ஏனென்றால், 2004-ல்இருந்து அங்கீகாரத்தில் இருந்த BSNLEU சங்கம் உருப்படியாகஎந்த சாதனையும் செய்யவில்லை என்பதே காரணம்ஆனால்நம்முடைய இந்த ஒரு மாத தேர்தல் சுற்றுபயணத்திற்கு பிறகுநாம் உறுதியாக 51% மேல் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கைவந்து விட்டதுநாடெங்கும் BSNLEU-க்கு எதிரான அலைவீசுகிறது
ஆறாவது அங்கீகார தேர்தலில் வாக்களிக்க இருப்போர் சுமார்2,04,000 பேர்நாம் உறுதியாக  இந்தியா முழுவதும்பெருவாரியான 1,05,000 வோட்டுகள் வாங்கி முதன்மைசங்கமாக ஆகுவது உறுதிநாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் கடந்த

ஐந்து சரிபார்ப்பு தேர்தல்களிலும் நாம் 35% வோட்டுகள்குறையாமல் வைத்திருந்தோம்அதுவும் கடந்த 8 வருடமாகBSNLEU- சங்கம் ஒன்பது சங்கங்களின் கூட்டணியோடுபணபலம்ஆள்பலம் மற்றும் அதிகார பலம் இவை எல்லாம்வைத்திருந்தும் அவர்களால் 46% வோட்டுகள் மட்டுமேவாங்க முடிந்ததுகுறிப்பாக கடந்த தேர்தலில்கூட அதுபெரும்பான்மை வோட்டுகள் பெற முடியவில்லைஆதலால்இந்த தேர்தலில் அது 30% வோட்டுகள் வாங்குவதே கடினம்,.BSNLEU- சங்க உறுப்பினர்களே கடந்த மூன்றாடுகளாகபோனஸ் இல்லாதது, LTC CUT, 10 நாள் விடுப்பினைகாசாக்குதல்மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெறுகின்றமருத்துவ அலவன்ஸ் பறிபோனது ஆகியவற்றால் விரக்தியின்எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

78.2% கிராக்கிப்படி இணைப்பு 01/01/2007-ல் இருந்து பெறாததால்சுமார் 6000 கோடி ரூபாய் தொழிலாளி இழந்துள்ளான்.அதுமட்டுமல்லாமல் NEPP-ல் SC/ST ஊழியர் பதவி உயர்வில்ஒதுக்கீடு என்பதை BSNLEU சரண்டர் செய்துவிட்டதால் SC/STஊழியர் கடும் அதிருப்தியில் உள்ளனர். TTA தோழர்களுக்குகடந்த 8எட்டு வருடங்களாக 30% FITMENT, PENSION BENEFITஆகியவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதால் SNATTA இந்தமுறை NFTE-BSNL –உடன் கூட்டணி வைத்துள்ளது.



மொத்தம் 35 மாநிலங்களில்  6 மாநிலங்கள் பெரிதானவை.அவை தமிழ்நாடு,ஆந்திரா,குஜராத்கர்னாடகாகேரளா,மஹாராஷ்டிரா ஆகும்.  இதில் கேரளாவைத் (ஒருவேளை)  தவிர மற்ற மாநிலங்களில் நாம் வெற்றி பெறுவது உறுதிஆகிவிட்டதுகடந்த 8 வருடங்களாக எதுவும் தொழிலாளிக்குஉருப்படியாக செய்யாத BSNLEU சங்கம் தனது தவறுக்குNFTE-BSNL – நோக்கி கைகாட்டுவதை பார்த்து தொழிலாளிகைகொட்டி சிரிக்கிறான்அதுமட்டுமலாமல் அபிமன்யுகார்ப்பரேஷ்ன் ஆனதுதான் இதற்கு காரணம் என்று கூறுவதுபேதமைகடந்த 13 ஆண்டுகளாக ITS OFFICERS கார்ப்பரேஷன்வேண்டாம் என்று இதுவரை வெளியே இருக்கவில்லையா?அதுபோல் இருக்க வேண்டியதுதானேயார் தடுத்தது? BSNLநிர்வாகத்தில் எதாவது நல்லது நடந்தால் அதற்கு BSNLEUகாரணம் என்றும் தவறு எதேனும் நடந்தால் 8 வருடமாகஅங்கீகாரத்தில் இல்லாத NFTE-BSNL தான் காரணம் என்றுகூறுவதையும் தொழிலாளி நன்கு கவனித்து கொண்டுதான்இருக்கிறான். DMK சங்கத்துடன் கூட்டணி வைப்பதற்காக அதன்மந்திரிகள் தயாநிதி மற்றும் ராசா செய்த ஊழலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள்தானே இவர்கள்ஆதலால் வரும்6வது சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU மண்ணை கவ்வப் போவதுநிச்சயம். 18/04/2013 வோட்டுகள் எண்ணி முடிக்கும்போது NFTE-BSNL முதன்மை சங்கமாக வந்திருப்பது நிச்சயம்.


சி.கே.மதிவாணன்மாநிலச் செயலர்சென்னை தொலைபேசி, 26/03/13 (நன்றி: கோவை வலை)

No comments:

Post a Comment