.

Sunday, March 3, 2013

கடலூர் மாவட்ட மாநாடு



நமது மாவட்டச் சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு கடலூரில், 03/02/2013 அன்று  மிகச்சிறப்பாக நடந்தேறியது.  இதுவரை நடந்திராத வகையில், 540 –க்கும் மேற்பட்ட சார்பாளர்கள்  (உறுபினர் எண்ணிக்கையில் 90%) அதிகமானோர் சார்பாளர்களாக கலந்து கொண்டனர்.

காலை 9.30 மணிக்கு தேசியக்கொடியினை தோழியர் விஜயலட்சுமி அவர்கள் ஏற்ற,  சம்மேளனக் கொடியினை நமது தொழிற்சங்க ஆசான்களில் ஒருவரான முதுபெரும் தலைவர் தோழர் D. ரங்கனாதன் அவர்கள் ஏற்றினார்.

மாநாட்டினை தோழர் நமது பொது மேலாளர் திரு. மார்ஷல் ஆண்டனி லியோ  அவர்கள் வந்திருந்து வாழ்த்தினார்.

மாநாட்டினை சகோதர சங்க நிர்வாகிகள் தோழர் C. பாண்டுரங்கன் (SNEA),  தோழர் P. வெங்கடேசன் (AIBSNLEA),   தோழர் R. ஜெயபாலன் (FNTO),   தோழர் சண்முகம் (PEWA)  வாழ்த்தினர். தோழர் M. சேகர் (AITUC) அவர்கள் மானாட்டில் உரையாற்றினார்.

தோழர் பட்டாபி, மாநிலச் செயலர் தனக்கே உரித்தான வகையில் புள்ளி விபரங்களுடன் சீரிய உரை நிகழ்த்தினார்.

தோழர் C.K.  மதிவானன் அவர்கள், ஏப்ரல் 16 தேர்தலில் நமது பிரச்சார யுக்தி குறித்து, எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார்.

மானாட்டின் இறுதியில் தோழர் R.  செல்வம் தலைவராகவும், தோழர் ஸ்ரீதர் செயலராகவும், தோழர் A. சாதிக் பாஷா பொருளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

பெருந்திரளாக கலந்து கொண்ட  தோழர்களையும், தோழியர்களையும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்த வரவேற்புக் குழுவினரையும் நாம் மனதார பாராட்டுகிறோம்.


விரிவான தகவல்களும், புகைப்படங்களும், நிர்வாகிகள் பட்டியலும் பின்னர்.

No comments:

Post a Comment