.

Friday, April 26, 2013


கடலூர் தொலைபேசிக் கிளையில் அத்துமீரல்

இன்று காலை தபால் தந்தி ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்க்கு திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையம் சென்ற நமது மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர் அவர்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் மாவட்ட சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பிரச்சார நோட்டீசை ஒட்டியபொழுது அங்கிருந்த தோழர். விநாயகமூர்த்தி, மாவட்ட செயலரை தள்ளி, நோட்டீசை கிழித்தார். அதை தடுக்க முற்பட்ட மாவட்ட செயலரை தாக்கவும் முயற்சி செய்தார். இந்தத் தவறை சுட்டிக்காட்டிய மற்ற தோழர்களின் மீதும், நமது மாவட்ட செயலரின் மீதும், நமது சம்மேளன செயலரின் அறிவுறுத்தலின்படி திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் 9 நபர்களின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணிக்கு காவல் நிலையத்திற்க்கு விசாரனைக்கு வரும்படி காவல் நிலைய அதிகாரியிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்துள்ளது. 
அநியாயத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலரின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்வோம். 
இந்த அநாகரீக செயலை மாவட்ட சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
-       மாவட்ட சங்கம்

1 comment:

  1. தோழரே !

    இந்த தகவல் முழுமையாக உண்மையினை மறைத்து பொய்யினை மட்டுமே உரைக்கும் அறிக்கை.

    மாவட்டச் செயலர் என்றால், எந்தக் கிளை நோட்டீஸ் போர்டிலும் , எவர் அனுமதியும் இல்லாமல்
    நோட்டீஸை ஒட்டலாமா?

    ஒட்டாதீர்கள் என்று சொன்ன தோழர் வினாயகத்தின் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தியவர்கள் யார்?
    ஒரு ஆளை, பத்து நபர்கள் சூழ்ந்துகொண்டு உயிர் நிலையிலேயே உதைத்தது யார்?

    பிரச்சினைகளைத் பேசித் தீர்த்துக் கொள்வதை விட்டு தாக்குதலில் இறங்குவது தான் உங்களது தர்மமா?

    ஆனந்தன்

    ReplyDelete