நமது அன்புத் தோழர் வி ரகுநாதன் (உட்கோட்டப் பொறியாளர்) விருப்ப ஒய்வு பெறுகிறார். தோழமை, அன்பு, பரிவு, மனித நேயம் எல்லாவற்றிற்கும் உதாரணமாக விளங்கியவர். இடது கொடுப்பதை வலது அறியாமல் செய்வது அப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நமது தோழர்கள் மருத்துவமனையில் அவசரம் கருதி சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும்போதெல்லாம் அவர்களுக்கு காலத்தே உதவி செய்த பண்பாளர். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகச் சிறந்த கொள்கைப் பற்றாளர். இடது சாரி சிந்தனையாளர் குடத்தில் இட்ட விளக்காக விளங்கும் இவர் இன்று (06/04/2013 )விருப்ப ஒய்வு பெறு கிறார். நமது அனைவரின் அன்பையும் ஒருசேரப்பெற்ற தோழரின் பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகிறோம். கடலூர் மாவட்டச் சங்க வரலாற்றில் தோழர் ரகுவின் பெயர் என்றென்றும் மாற்றவியலாத ஒன்றாகத் திகழும்.
வாழ்க நீ எம்மான்
No comments:
Post a Comment