.

Monday, August 19, 2013

புதுவை மாவட்ட விரிவடைந்த செயற்குழு 19-08-13

          19-08-13 அன்று புதுவை மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு தோழர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது . மாநில பொருளாளர் தோழர் K அசோகராஜன் துவக்கவுரையாற்றினார். SNATTA  மாவட்ட செயலாளர் D மணிகண்ணன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் காமராஜ் நிகழ்ச்சி நிரலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார் . நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார்.  மாநில செயலர் R பட்டாபிராமன் அவர்களின் உரையில் தொலைதொடர்பு துறையில் இன்றைய நிலையை பற்றியும் BSNL இன் நிதி ஆதாரத்தை பற்றியும் மிக தெளிவாக பதிவு செய்தார்.
         
      விரிவடைந்த  மாவட்ட செயற்குழுவில் ஆய்படுபொருள்  விவாதத்தின் பொது அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு அதில் வைப்பு நிதி (FIXED DEPOSIT ) பற்றி விவாதித்தனர். அதில் மாநில பொருளர் தோழர் K அசோகராஜன் அவர்களின் தனிப்பட்ட பெயரில் சங்கத்தின் பணம் இருப்பது கடுமையாக விவாதிக்கப்பட்டது . அவ்வப்போது ஏற்பட்ட அவை மீறல்களை மாநில செயலர் தலையிட்டு முறைப்படுத்த வேண்டியிருந்ததது . மாநில பொருளாளர் தோழர் K அசோகராஜன் அவர்களின் தனிப்பட்ட பெயரில் உள்ள வைப்பு நிதியை சங்கத்தின் பெயரில் மாற்ற முடிவெடுக்க மாவட்ட செயற்குழுவை  கூட்ட முடிவெடுக்கப்பட்டது  







No comments:

Post a Comment