கடலூர் CSC -ல் CTO இருந்த இடத்தில் Call Centre மாற்றப்பட்டது தொடர்பாக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க ஆர்பாட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.
இது சம்பந்தமாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டோம். DGM (CFA ) உடனான பேச்சுவார்த்தையில் நமது GM (O )கிளை பொறுப்பு செயலர் S ராஜேந்திரன் மாவட்ட செயலர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
பேச்சுவார்த்தையின் போது நிர்வாகம் தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்தது.அதில் பிரச்சினை தீர்விற்கான விஷயங்கள் எதுவும் இல்லாததால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் மதியம் 1 மணிக்கு GM அலுவலத்தின் முன் கிளை தலைவர் D துரை தலைமையில் நடைபெற்றது
மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் கலந்து கொண்டு CTO இருந்த இடத்தில் Top Up பிரிவு வாடிக்கையாளருக்கும் CSC ஊழியருக்கும் எவ்விதம் பலனளிக்கும் என்பதை பற்றியும் GM அலுவலகத்தில் ஊழியருக்கு இடநெருக்கடி பிரச்சினை பற்றியும் விரிவாக விளக்கி பேசினார். இறுதியில் கிளை செயலர் (பொறுப்பு ) S ராஜேந்திரன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment