மாநில சேம நல நிதி கூட்டத்திற்கு முன் தயாரிப்புக்காக 29-11-2013 அன்று முற்பகலில் மாநில சேம நலக்குழு NFTE உறுப்பினர் இரா ஸ்ரீதர் , மாநில செயலர் R பட்டாபிராமன் மற்றும் RGMTTC கிளை செயலர் சீனிவாசன் ஆகியோருடன் மாநில சங்க அலுவலகத்தில் விவாதித்தார்
மாலையில் மாநில சேம நல நிதிக்குழு கூட்டம் புதிதாக கிரீம்ஸ் சாலையில் மாற்றப்பட்ட CGM அலுவலக CONFERENCE HALL-ல் -அலுவலகத்திலேயே முதல் கூட்டமாக நடைபெற்றது .CGM திரு.அஷ்ரப் கான் அவர்கள் தலைமை தாங்கினார். GM (HR ) திருமதி R இராதா அவர்கள் வரவேற்றார் . புதிய கட்டிடத்தில் நடக்கும் முதல் கூட்டமாக ஊழியர் சேம நலக்கூட்டம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் .DGM (A ) திரு R .ரகுநாதன் செயல்பாட்டறிக்கையை தாக்கல் செய்தார்
பின்னர் நாம் அளித்த விவாதப்பொருள் 8 உட்பட விவாதிக்கப்பட்டது .
1. ஓய்வு பெறும்போது GIFT CHEQUE ரூ 1200/- லிருந்து ரூ 2000/- ஆக உயர்த்தல்- ஏற்கப்பட்டது
2. மூக்குக்கண்ணாடிக்காக ரூ 400/- லிருந்து ரூ 800/- உயர்த்தல்- ஏற்கப்பட்டது
3. சேம நலப்பிரிவு ஊழியருக்காக மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தல் - ஒப்புக்கொள்ளப்பட்டது
4.புத்தக உதவித்தொகை , தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமல்லாத படிப்பு உதவித்தொகையை உயர்த்திட கேரளா மற்றும் கர்நாடகா நடைமுறையை பரிசீலனை செய்து முடிவு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது
5. திருமண கடன் தமிழகம் முழுவதும் ரூ 50000/-ஆக ஒரே மாதிரி அமுல்படுத்தப்படும் திருமண கடன் ரூ 1 லட்சம் வரை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் சாதகமாக பரிசீலிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது
6. பெண்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க வேண்டப்பட்டது . முதன்மை பொது மேலாளர் இரு பாலருக்கும் அனுமதிக்கவும் தொகையை உயர்த்தவும் இசைந்துள்ளார்
7.மருத்துவ முகாம்கள் -நல்ல யோசனை என்று வரவேற்கப்பட்டு முகாம் ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது
8. கடன் தவணை பிடித்தத்தை HRMS PACKAGE -ல் இணைக்க CGM அலுவலக கணக்குப்பிரிவு முன்முயற்சி எடுக்கும். பூனா ITPC பிரிவுக்கு எழுதி உடனடியாக அமல்படுத்த ஏற்கப்பட்டது
9. ஊழியர் வங்கி கணக்கு மூலம்( NEFT /RTGS ) மாவட்டங்களில் சேம நல கடன்களை வழங்கிட ஏற்கப்பட்டது
10. வங்கிக்கடன் பெறும்போது இன்ஷூர் செய்வதன் முக்கியத்துவம் விவாதத்தில் வெளிப்பட்டது உரிய முறையில் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) செய்யும்போது காப்பீடு செய்வதையும் இணைக்க கார்பரேட் அலுவலகம் டெல்லிக்கு பிரச்சினையை பரிசீலிக்க அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது
11.சேம நல மாதாந்திர சந்தா ரூ 50/- ஆக முந்தைய 09-01-2013 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தமிழகம் முழுவதும் அமல் செய்து சேமநல நடவடிக்கைகளை மேலெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது
(கூட்ட நடவடிக்கை மினிட்ஸ் கிடைத்ததும் வெளியிடப்படும் )
No comments:
Post a Comment