கேவி (COM .K .V ) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட
தோழியர் K விஜயலட்சுமி
இன்று நம்மிடையே இல்லை .
தொழிற்சங்கப் போராளியான தோழியர் K V இறுதியில் நோயிடனும் கடுமையாகப் போராடி, இன்று (18-12-2013) மாலை தனது போராட்டத்தை முடித்து கொண்டு கால வெளியில் கலந்து விட்டார் .
சிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் பாங்கு, கொள்கையில் உறுதி, விவாதங்களில் விவேகம், அலுவலக பணிகளில் நேர்த்தி என பன்முக பரிமாணம் கொண்ட அன்புத் தோழி அவர்.
தொழிற் சங்க இயக்கத்தில் பெண்களைத் திரட்டுவதில் களம் காண்பதில் தனி முத்திரை பதித்த தோழியர், GM அலுவலக கிளை சங்கத்தில் பல பொறுப்புகளையும் , மாவட்ட சங்க நிர்வாகியாகவும் , மாநில சங்க அமைப்புச் செயலராகவும் சிறப்புற பணியாற்றியவர் .
தோழியரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் .
இதய அஞ்சலி தகவல் பலகைக்கு இங்கே
தோழியர் விஜயலட்சுமி ஆத்மா சாந்தியடைய எங்களின் கண்ணீர் அஞ்சலியை சிதம்பரம் கிளையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.தோழர் பலராமன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDelete