ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலேயே அதிக வாக்குப்பதிவு சதவீதம் இதுவாகும்.
கடந்த 1984-85-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராஜீவ் காந்தி அரசியலில் களமிறங்க, அப்போது ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக 64.01 சதவீத வாக்குகள் பதிவாகின.
மக்களவைத் தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
9-வது கட்ட வாக்குப்பதிவு
இறுதி மற்றும் 9-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.
இதில், மேற்கு வங்க மாநிலத்தில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்களித்தார் 97 வயது சியாம் சரண் நேகி. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியோ அர்விந்த் கேஜ்ரிவாலோ கதாநாயகன் அல்ல. நேகிதான். காரணம் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் முதல் ஒன்றுவிடாமல் தவறாமல் வாக்களித்து வருகிறார் நேகி.
1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான குளிரில் பாதையெல்லாம் பனிபெய்து மூடியிருக்க நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்தவர்தான் சியாம் சரண் நேகி. அப்போது அவருக்கு வயது 34. 1952 பொதுத் தேர்தல் முதல் கட்டமாக 1951-லேயே இமாசலத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இமாசலத்தில் கடும் குளிர்காலமாக இருக்கும் என்பதாலும் அது வேட்பாளர் களுக்கும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கும் பெரிய இடை யூறாக இருக்கும் என்பதாலும் தேர்தல் அங்கு முன்கூட்டியே நடந்தது.
நன்றி : தி ஹிந்து தமிழ்
No comments:
Post a Comment