அறிவார்ந்த அதிகாரிகள்...
அவதிப்படும் தோழர்கள்...
ஒரு வேதனைக்குரல்...
---------------------------------------------
JTO ஆளெடுப்பு விதி 26/09/2001ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் ஒரேயொரு இலாக்காப் போட்டித்தேர்வு 02/06/2013 அன்று மட்டுமே நிர்வாகத்தால் ஒப்புக்கு நடத்தப்பட்டது.
நமது அதிகாரிகள் அறிவார்ந்த தீர்க்கதரிசிகள் என்பதை அந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியான அன்றே நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் காலியிடங்கள் 2000,2001,2002 மற்றும் 2012 ஆகிய வருடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளுக்கான காலியிடம் எங்கே சென்றது என்பது நமது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
JTO நேரடி நியமனம் மார்ச் 2001ல் 3199 பதவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த நியமனம் 2001 JTO ஆளெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக BSNL தலைமையக உத்திரவு எண்: 5-9/2001/PER IV தேதி 10/10/2001 கூறுகின்றது. இதன்பின் 2002, 2005,2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் JTO நேரடி நியமனம் நடந்துள்ளது.
2007 மற்றும் 2008ல் மட்டும் ஏறத்தாழ 250 முதல் 300 JTO காலியிடங்கள் தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் 2001,2005,2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான இலாக்கா நியமனத்திற்கான காலியிடங்கள் அறிவிப்பு இன்று வரை BSNL நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் நெடுங்கதைகள் சொல்வதும் பழங்கதைகள் சொல்வதும் மட்டுமே நமது அதிகாரிகளின் வாடிக்கையாக உள்ளது. நியாயமான முடிவுகள் ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் சேவையில் மூத்த TTAக்களையும் இளைய TTAக்களையும் மோதவிட்டு அவர்களை நீதிமன்ற வாயிலில் காத்துக்கிடக்க வைத்ததுதான் நமது அதிகாரிகளின் திறமையாகும்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த மூத்த TTA தோழர்களும்
13 ஆண்டுகளாக சேவை செய்த கல்வித்தகுதியும் திறமையும் கொண்ட இளைய TTA தோழர்களும் ஒரு பதவி உயர்வு கூட இல்லாமல் இருப்பது BSNLல் வேதனைமிக்க சாதனையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் BSNL உத்திரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மூத்த மற்றும் இளைய தோழர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆண்டுகள் பல ஆயினும் பிரச்சினை இன்னும்
கிணற்றில் போட்ட கல்லாகவே.. இருக்கின்றது.
நாங்களும் விமோச்சனத்திற்காக காத்திருக்கின்றோம்..
கல்லாக.. சபிக்கப்பட்ட... கல்லாக..
வேதனையுடன்...
13 ஆண்டுகளாக TTAவாகவேப் பணிசெய்யும்
P.செல்லப்பா,
SNATTA மாவட்டச்செயலர்
காரைக்குடி.
9489943483.
நன்றி : NFTE காரைக்குடி வலைத்தளம்
No comments:
Post a Comment