.

Wednesday, October 29, 2014

திண்டிவனம் முப்பெரும் விழா

திண்டிவனம் முப்பெரும் விழா 29-10-2014 அன்று   நடைபெற்றது. தோழர். A.சுப்ரமணியன் பணி ஒய்வு  பாராட்டு விழாவில் திண்டிவனம் கோட்டப்பொறியாளர் திரு.அன்பழகன், உட்கோட்டப் பொறியாளர் திரு.நடராஜன், BSNLEU செயலர் புண்ணியக்கோடி, ஓய்வூதியர் சங்கத்தலைவர். துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர். A.சுப்ரமணியன் சிறப்பான மதிய உணவு விருந்தளித்தார். உணவு இடைவெளிக்குப்பின் திண்டிவனம் கிளைமாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். AIBSNLEA மாநில துணைத்தலைவர் தோழர்.நடராஜன், புதுவைத் தோழர்கள் செல்வரங்கம், நீலமேகம், செஞ்சி ஹாரூன்பாஷா, கடலூர்  V.இளங்கோவன், TMTCLU  சார்பில் V.முத்துவேல்  வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத்தலைவர் தோழர் R..செல்வம், மாவட்டச்செயலர். தோழர். இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் சிறப்புரையாற்றினார்.



மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் :           தோழர்.  G.ஜெயசந்தர். TTA
உதவி தலைவர்கள்:   தோழர்கள்     A. அரிகிருஷ்ணன், sss
                                     D. திருவிக்ரமன், TM
                                     S. குமார், TM
                                     V. அசோகன், TM
செயலர்                   தோழர்.   M. செல்வக்குமார், Sr.TOA
உதவிச்செயலர்கள்   தோழர்கள்       E. நீதி, TM
                                      A. சுரேஷ், TTA
                                      C. கிருஷ்ணமூர்த்தி, TM
                                      B. ராமமூர்த்தி, TSO
                                      T.ஆரோக்கியதாஸ், TM
பொருளர்.                 தோழர்.  A. முருகானநந்தம், TTA
உதவிப் பொருளர்          தோழர்.    R. சேகர், TM
அமைப்பு செயலர்கள்:      தோழியர். K.மேனகா, SSS
                         தோழர்.     K. கோவிந்தன், TM
    தோழர்.     K. கருணாகரன், TM
தணிக்கையாளர்:         தோழர்.       S. நேமிதாஸ், STS

திண்டிவனம் பகுதியில் புதிதாக TMTCLU கிளை துவங்கப்பட்டது. தலைவர்,செயலர், பொருளராக தோழர்கள். தர்மன்-CL , கணேசமூர்த்தி-TM, சுனந்தாதேவி-CL ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். TMTCLU கிளைச்செயலர் தோழர்.கணேசமூர்த்தி-TM நன்றி கூற மாநாடு இனிதே முடிவுற்றது. மாநாட்டை சிறப்பாக நடத்திய திண்டிவனம் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள். விழாவிற்கான அரங்கை இலவசமாக அளித்த ஓய்வுபெற்ற மூத்த தோழர். செல்வராஜ் STS அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்!
புதிய நிர்வாகிகளுக்கு நமது வீரவாழ்த்துக்கள்! 









No comments:

Post a Comment