.

Monday, November 24, 2014

நவம்பர் 24
சம்மேளன தின வாழ்த்துக்கள் 

நாம் 60 ஆண்டு வைரவிழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நீண்ட பயணத்தில் இயக்கம் சந்தித்த சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றியிருக்கிறோம். பண்டித நேரு காலம்தொட்டு இன்று வரை எந்த அரசையும் கண்மூடித்தனமாக ஆதரித்ததுமில்லை; எதிர்த்ததுமில்லை. கோரிக்கைகளின் அடிப்படையில் எல்லா அரசுகளையும் எதிர்த்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். பல வெற்றிகளை பெற்றுருக்கிறோம்.

தோழர் பாபு தார பாதா,   தோழர் ஹென்றி பேட்டன், தோழர் தாதா கோஷ், தோழர் ஓ பி குப்தா, தோழர் கே ஜி போஸ், தோழர் ஜெகன், தோழர் சந்திரசேகர், தோழர் விச்சாரே ஆகியோரின் தியாகம் நினைந்து பெருமை கொள்வோம்.

ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற நிலையிலிருந்து கட்சிக்கு ஒரு சங்கம் என்று தள்ளப்பட்டாலும் ஊழியர் பிரச்சினைகள் மீது நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். வரும் காலங்கள் சோதனை மிகுந்த காலங்களே. விழிப்புடன் செயல்படுவோம். இயக்கத்தில் பெற்ற அனுபவங்கள் நமக்கு வழிகாட்டட்டும்.

No comments:

Post a Comment