ஆர்பாட்டம்!
16-12-2014 அன்று கடலூர் அலுவலகம் முன் ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு
மாதமாகியும் ஊதியம் வழங்காததைக்கண்டித்தும், புதிய ஒப்பந்தத்தில் உள்ள
குறைபாடுகளைக்களைய வற்புறுத்தியும் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர்கள் தோழர்கள் செல்வம்-NFTE, A.அண்ணாமலை-BSNLEU கூட்டுத்தலைமை ஏற்றனர். TMTCLU மாவட்டச்செயலர் G.ரெங்கராஜ், TNTCWU மாவட்டச்செயலர் M.பாரதிதாசன்,NFTE மாவட்டச்செயலர் இரா.ஸ்ரீதர்,BSNLEU மாவட்டச்செயலர் K.T.சம்பந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். TMTCLU மாவட்டத்தலைவர் M.S.குமார் நன்றியுரை ஆற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.தமிழ்மணி,
மாநில துணைத்தலைவர் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டது மிகச்சிறப்பம்சமாகும். மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஒப்பந்த ஊழியர்கள்
பெரும்பான்மையாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பித்த
தோழர்களுக்கு மாவட்டசங்கத்தின் நன்றியினை உரித்தாக்குகிறோம்..
No comments:
Post a Comment