விசாலத்தை விழுங்கிய
கூர்மையான சிறு சிறு கண்கள்....
குருந்தாடிப் பொந்துக்குள்
யுகப்புரட்சி....
தேசத்தின் அதிபர் ஆனாலும்
தோழர்களோடு தோழனாய்;
மரக்கட்டைச் சுமையைப்
பகிர்ந்து கொண்ட
தோழமைத் தோள்கள்....
வெளிச்சமாய் தோழர் லெனின்
('வெளிச்சப்புள்ளிகள்' கவிதை நூலில் கோவி. செயராமன்)
1870 ஏப்ரல் 22-ல் பிறந்த லெனினின் நினைவு தினம் இன்று -ஜனவரி 21 (மறைந்த ஆண்டு 1924)
மார்க்சிய வழியில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய மூன்று முனைகளிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு தனது சொல்லாலும் செயலாலும் அரிய பொக்கிஷங்களை வாரி வழங்கி இன்றும் நமக்கு வெளிச்சத்தை காட்டுபவர். தொடர்ந்து லெனினைப் பயில வேண்டுவது அவசியம்.
லெனின் கூறுகிறார்:
"ஒருவன் சமுதாயத்திற்காக பாடுபட விரும்பினால் முதலில் அவன் குறைந்தபட்சம் நேர்மையாளனாகவும், உழைப்பாளனாகவும் இருத்தல் வேண்டும்.
- மக்களிடம் செல்ல வேண்டும்; மக்களிடமிருந்து படிக்க வேண்டும்.
- லட்சியத்தை நோக்கி மக்களை (வர்க்கமாக)திரட்ட வேண்டும்.
- முடிவுக்குப்பின் செயல்பட தொடங்கிவிட வேண்டும்; கால தாமதம் கூடாது.
- கடமை ஆற்றுவதை வழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.
- தவறான போக்குகள் எல்லாவற்றையும் எதிர்த்து போராட வேண்டும்.
- சேவை, உதவி செய்வதற்கு உபகாரம் எதையும் பெறக்கூடாது.
என்பவை அவரது வழிகாட்டு வாழ்நெறிகள்!
"தவறு செய்தால் பரிசீலித்து ஒத்துக்கொள்வோம் தவறுகளிலிருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வோம்" என்பது லெனின் கொள்கையின் அடிப்படை அம்சம். இதனை புறக்கணித்ததின் விளைவே சோவியத் வீழ்ச்சி.
தோழர் லெனினை தொடர்ந்து பயில்வோம்!
பயின்றபடி இயங்க முயல்வோம் !!
No comments:
Post a Comment