அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம்
அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம்
திருக்கோயிலூர் லஷ்மிபாலாஜி திருமணமண்டபத்தில் இன்று (27-01-2014) செவ்வாய் காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கூட்டத்திற்கு
மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.A.ரவிசந்திரன் தலைமையேற்றார்.
தோழர். S.கார்த்திகேயன் வரவேற்புரை, தோழர்.K.கோபு அஞ்சலி உரையாற்றினர். மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.
பின் தோழர்.V.இளங்கோவன் அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு
ஏன்? எதற்கு? என்ற விளக்கத்தை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய கிளை நிர்வாகிகளாக தலைவர்,செயலர்,பொருளர் முறையே தோழர்கள் K.கோபு-TM, பழனிவேலு-TTA, K.சீனிவாசன்-Sr.TOA ஆகியோர்
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வறிவிப்பை
மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம் கூற அனைவரும் கரகோஷமிட்டனர்.
பிறகு மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம், TMTCLU
மாவட்டசெயலர் தோழர்.G.ரங்கராஜு, மாவட்ட உதவிசெயலர்கள் தோழர்கள் P.அழகிரி, ரவிச்சந்திரன், D.குழந்தைநாதன், கள்ளக்குறிச்சி கிளைச்செயலர் தோழர்.S.மணி, பண்ருட்டி கிளைச்செயலர் தோழர் S.பாஸ்கரன், விழுப்புரம்
கிளைப்பொருளர் தோழர்.மகாலிங்கம், கடலூர்
தோழர்கள். P.ஜெயராஜ்,
V.முத்துவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அரகண்டநல்லூர் கிளைத் தோழர்கள் தங்களது கிளையிலுள்ள பிரச்சனைகளை விரிவாக
எடுத்துரைத்தனர். முக்கிய
நிகழ்வாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டசெயலர் தோழர்.A.V.சரவணன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு நமக்கு பெருமை சேர்த்தார். அரசியலுக்கும், நமது சங்கத்திற்கும், தனக்கும் உள்ள நெருக்கத்தையும் உள்ள உறவையும் விளக்கமாக எடுத்துக்கூறி,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தனது வீரவாழ்த்துக்களை தெரிவித்தார்.
இறுதியாக மாநில உதவிசெயலர் தோழர்.K.நடராஜன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் மாவட்டசெயலர் தோழர். இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றி நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில்
மாவட்டத்தின் பல கிளைகளிலிருந்தும் கிளைச்சங்க நிர்வாகிகளும்,கிளைத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளைத் தோழர்களை மனதார மாவட்டசங்கம் பாராட்டுகிறது.
No comments:
Post a Comment