குன்றென...
நிமிர்ந்து நிற்கும்... நமது பாரம்பரியம்...
GPF நிலையை...
அறிந்து...
அறிந்திட... அறிய பல தகவல்...
தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம்
உட்பட)
தொலைத் தொடர்பு
மாவட்டங்களில் இருந்து GPF தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த
ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.
இதற்கான நிதியினை நமது மத்திய, மாநில
சங்கத்தின் தொடர் முயற்சியால் முழுமையாக 21-01-2015
அன்று நமது மத்திய
நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில்... நமது மாநில
நிர்வாகம் GPF தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
22-01-2015 அன்று
பணப்பட்டுவாடா செய்யப்படும்
என்று நமது மாநில சங்கத்திடம்
தெரிவித்தது.
ஒரு சில மாவட்டத்தில் ஏற்பட்ட
ஊழியர் இறப்பு காரணமாக
அவர்கள் குடும்பத்திற்கு
உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி
வழங்க நிர்வாகம் முற்பட்ட
போது புதிய மென்பொருள்
ERP அமுலாக்கத்தின்
குளறுபடி காரணமாக 22-01-2015 அன்று GPF
தொகை வங்கிக்கு அனுப்ப முடியாத
நிலை ஏற்பட்டது.
நமது மாநில சங்கத்தின் தொடர்
முயற்சியால்...
மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி
சரி செய்யப்பட்டு 23-01-2015
இன்று மாநிலம் முழுவதும் GPF தொகை
பெறுவதற்கு
விண்ணப்பித்த 5660 ஊழியர்
மற்றும் அதிகாரிகளுக்கான
தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு
தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு
அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25-01-2015
(ஞாயிற்று
கிழமை) மற்றும் 26-01-2015 (குடியரசு
தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி
(Chief
Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள்
வங்கிக்கு
அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர்
மற்றும்
அதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா
செய்திட
மாநில நிர்வாகம் ஏற்பாடு
செய்துள்ளது.
ERP... நிதி
நெருக்கடி... உள்ளிட்ட... பல்வேறு பிரச்சனைகளின்
தாக்கத்தில் இருந்து
ஊழியர்களின் பிரச்சனைகளை
பாரம்பரிம் குன்றாமல் காக்க
போராடி வரும்
நமது மாநில சங்கத்தின் மரபை
போற்றுவோம்.
அறிந்திட முடியாத......!
பல செய்திகளை... பல
தகவல்களை... பல புள்ளி விவரங்களை... கடைநிலை தொண்டன் கூட அறிந்திட செய்திடும்.
நமது மாநில செயலரின் மரபை
போற்றுவோம்.
அந்நிலை... இந்நிலை...
எந்நிலை... ஆனாலும்
ஊழியர் நலன் நிலைக்காக போராடி
வரும்
நமது மாநில சங்கத்தின் மரபை
போற்றுவோம்...! போற்றுவோம்...!! போற்றுவோம்...!!!
No comments:
Post a Comment