.

Sunday, January 4, 2015

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

அன்புள்ள தோழர்களே!       தோழியர்களே!!

     வேறுவழியின்றி இதனை எழுதுகின்றோம். புத்தாண்டில் சிதம்பரம் மின் விபத்தில் ஒரு BSNL ஒப்பந்தத் தொழிலாளி பரிதாபமாக மரணமடைந்தார். அவரது உடற்கூறு ஆய்வு, போலீஸ் வழக்கு, பூத உடல் இறுதிச் சடங்கு  எதுவும் முடியவில்லை. குடும்பத்தினர் மற்றும் கூடி இருந்தோர் கண்ணீர் காயவில்லை.

     அதற்குள் ஒரு கும்பல் கீழ்த்தரமான அரசியலைத் துவக்கி விட்டது. பிணத்தை வைத்துப் பிழைப்பை நடத்தும் கீழ்மை குணக்கேட்டை அரங்கேற்றியது. புனிதர் வேடமிட்டு வசூல் வேட்டையைத் தொடங்கிவிட்டது.

     துக்க வீட்டில், அதிகாரி – நிரந்திர ஊழியர்கள் இவர்கள் எல்லாம் ஒப்பந்த தொழிலாளிக்கு எதிராய் நிற்பவர்கள் என ஒரு நாடகம்....

     இறந்தவர் இறுதிச் சடங்குகள் முடிவதற்குள் அதே நிரந்திர ஊழியர்களிடம் கடலூரில் வசூல் வேட்டை நடத்தியது  இன்னொரு நாடகம்...

     மறுநாளும் இறுதிச்சடங்குகள் வரை NFTE-மாவட்டச் செயலரும், சிதம்பரம் முன்னணி தோழர்களும் சுடுகாட்டில் இருந்த போது கடலூரில் இத்தனை டிராமாக்கள்...
               
உண்மை வூட்டை விட்டுப் புறப்படும் முன்பே....
பொய்யும் புனைச் சுட்டும், வதந்திகளும் ரெக்கை கட்டி
உலகைச் சுற்றி வந்து விடும் எனபது தான் எத்தனை உண்மை..
கருணை மனம் படைத்த நம் அதிகாரிகளும் ,தோழர்களும் போலிகளை நம்பி தவறானவர்களுக்கு நன்கொடை தந்தது அறிந்து இதனை வெளியிடுகின்றோம்.

உப்புக் கல்லை வைரம் என்று நம்பி ஏமாறாதீர்கள்..

கருணையோடு இருப்பது வேறு.. உங்கள் கருணையை – நல்ல உள்ளத்தைப் – பொய்யர்கள் பகடைகாயாய் பயன்படுத்திக்
கொள்வதைப் பார்த்துப் கொண்டிருப்பது வேறு.

     பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ கடலூர் அனைத்து மாவட்ட சங்கங்களின்சார்பில் முறையான அறிக்கை தனியே வருகிறது.

     நன்கொடைகளை முறைபடுத்தி உதவுவோம்..
                                                            தோழமையுள்ள
                                                                  இரா.ஸ்ரீதர்
                                                            NFTE-மாவட்டச் செயலர்.
                                                                

No comments:

Post a Comment