BSNL அதிகாரிகள் – ஊழியர்கள்
கூட்டமைப்பு
பரிதவித்து நிக்குது ஒரு குடும்பம்!
உதவுவது நம் கடமை!!
கை ஏந்திக் கேட்கின்றோம், நன்கொடை தாரீர்...
அன்புள்ள தோழர்களே!..
தோழியர்களே!...
தோழர் R.பாலசுப்ரமணியன் என்ற ஒப்பந்த ஊழியர்
சிதம்பரத்தில் புத்தாண்டு தினத்தில்
- பழுது நீக்க சென்ற இடத்தில் – நடந்த விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
BSNL-லுக்காக பணியாற்றிய அந்தத் தொழிலாளி இன்று இல்லை!.. அவரது சொற்ப ஊதியத்தை நம்பி இருந்த ஒரு குடும்பமோ இன்று நிற்கதியாய் உள்ளது...நம் எல்லோர் கண்களிலும் செய்தி அறிந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது....
ஒப்பந்த ஊழியர் என்பதனால் இழப்பீடு ஏதும்
பெரிய அளவில் கிடைக்க
வாய்ப்பில்லை...
ஆனால் அவரது தோழர்களான நம்மால் அவர்
குடும்பத்திற்கு நிச்சயம் உதவ முடியும். இதுபோல முன்பும் உதவி இருக்கின்றீர்கள்
அந்த நம்பிக்கையில்
வேண்டுகின்றோம்...
உதவுங்கள் , பெரிய
மனதோடு
ஓரிரு கண்ணீர்த்
துளிகளையாவது
துடைக்க
முயல்வோம்!..
வழுக்கும் நிலத்தில் ஊன்றுகோலாய்...வாழ்க்கை
இழந்தவர்களுக்கு
உங்கள் உதவி புதிய நம்பிக்கையைத்
தரட்டும்.
கண்ணீரோடு வேண்டுகின்றோம்!..
தாராளமாக
நிதி அளிப்பீர்!...
தோழமையுள்ள
K.T.சம்பந்தம் D/S, BSNLEU இரா.ஸ்ரீதர் D/S ,NFTE , R.ஜெயபாலன் D/S ,FNTO
C.பாண்டுரங்கன் D/S SNEA , P.வெங்கடேசன் D/S ,AIBSNLEA
G.ரங்கராஜ் D/S ,TMTCLU, M.பாரதி D/S ,TNTCWU,
NFTE - BSNLEU - FNTO
- SNEA – AIBSNLEA - TMTCLU – TNTCWU மாவட்டச் சங்கங்கள்...
No comments:
Post a Comment