தர்ணா போராட்டம் வெல்லட்டும்
நாட்டின் அபரிதமான வளர்ச்சிக்கு தேவை பொதுத்துறை
நிறுவனங்கள்தான் என்று கூறியதோடு மட்டுமில்லாமல்
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்
அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்கள்
நாட்டில் ஆங்காங்கே தனியார் பைனான்சியர் கம்பனிகளாலும்
தனியார்துறை வங்கிகளாலும் மக்கள் அல்லல்படுவதனை
கண்டு மனம் தாங்க முடியாமல்தான் அனைத்து தனியார்
வங்கிகளையும்பொதுத் துறை வங்கிகளாக மாற்ற அதிரடி
உத்தரவினை பிறப்பித்தார் அன்றைய
பாரதப் பிரதமர் திருமதி இந்திரா அவர்கள்
ஆனால் இன்று படித்த மேதாவி அரசியல் தலைவர்கள்
நாட்டின் விலைமதிப்பில்லாத சொத்துகளை அந்நிய
நாட்டுக்கு கம்பெனிகள் வளம்
பெற சிவப்பு
கம்பளம் போட்டு வரவேற்று விற்கிறார்கள்
இன்றைய அரசியல் தலைவர்கள்
தீவிரவாத தாக்குதலில் இறந்து போன ராணுவத்தில்
பணிபுரிந்த மேஜர் அவர்களுக்கு உடனடியாக பொதுத்துறையான LIC - யின் இன்சுரன்ஸ் மூலம் பல
லட்சங்களை கொடுத்தது. அதே வேளையில் தனியார்இன்சுரன்ஸ் கம்பெனி தீவிரவாத தாக்குதலில்
இறந்தால் எங்கள் கம்பெனி சட்டதிட்டங்களின்படி தரமுடியாது என்றது.
செல் சேவை முதன் முதலில்
தனியாருக்குதான் மத்திய அரசாங்கம் வழங்கியது அப்போது செல் அழைப்பு (OUT GOING) கட்டணமும் சரி, வரும்
அழைப்புகளுக்கும் (INCOMING) சரி, கட்டணங்கள்
அதிகப்படியான தொகைதான் வசூலிக்கப்பட்டது. ஆனால் பொதுத்துறை நிறுவனமான BSNL செல் சேவை தொடங்கியவுடன் வரும்
அழைப்பு கால்களுக்கு இலவசம் என்றும்,
அழைப்பு கட்டணங்களுக்கு குறைந்த கட்டனமும் வழங்கிய பெருமை பொதுத்துறையானயான BSNLஐ சாரும்.
இன்று
ரயில்வே துறையினையும் தனியார்மயம்
இன்னும்
பல துறைகளையும் தனியாருக்கு என்றால்
நாட்டின்
நிலைமை என்ன!! மக்களே சிந்தியுங்கள்!!! ....
அன்று நாட்டை
கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள்.......
கொல்லைபுறமாக
வந்து கொள்ளையடித்துச் சென்றனர்....
இன்று
நமது நாட்டின் விளைமதிப்பில்லாத சொத்துகளை கொள்ளையடிக்க அந்நிய நாட்டின் கம்பனிகளுக்கு இந்திய அரசு முன் வாசலை திறந்து சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.
.அன்று
பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பபடவில்லை . தேச வளர்ச்சிக்காகவும், வேலை வாய்ப்பிற்க்காகவும்
தான் உருவாக்கப்பட்டது...
நமது தியாக தலைவர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை
சீர்குலைக்க அனுமதிக்கமாட்டோம்.
தோழர்களே சிந்தீப்பீர்.... முதலில் நமது குடும்பத்திலுள்ள
அனைவரிடமும் பொதுத்துறையின் அவசியமும் அதனால்
நாட்டு மக்கள் அடையும் பயனையும்
விளக்கி சொல்வோம் ... நிச்சயம் மாற்றம் உண்டாகும்..
உங்களது தர்ணா போராட்டம் வெல்லட்டும்
வீர வாழ்த்துகளுடன்....
இவண் : தமிழ்மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்
சங்கம் மாவட்டச் சங்கம்,(TMTCLU)
No comments:
Post a Comment