அன்புள்ள தோழர்களே!
கடலூர் மீண்டும் சாதனை படைத்துள்ளது. நமது கூட்டமைப்பின் சார்பில் மார்ச் வேலைநிறுத்த கோரிக்கை விளக்க சிறப்புக் கருத்தரங்கம் அனைவராலும் பாராட்டப்பட்டது. கலந்து கொண்ட அகில இந்திய தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரும் கடலூர் தோழர்களின் கருத்தரங்க ஏற்பாடுகளை பாராட்டியுள்ளனர்.
பசிக்கு உணவு என்ற வகையில் சிறிய ஏற்பாடு எனினும் சுவையில் குறையேதுமில்லை என்ற அளவில் கலந்து கொண்ட 1500 தோழர்களுக்கும் நிறைவு.
கருத்தரங்கத்திற்கு பொருள் சேகரிப்பு, ஊழியரை திரட்டுதல், கருத்து பிரச்சாரம், உணவு தயாரிப்பு-பரிமாறல் என ஓடி ஓடி உழைத்த அத்தனை தோழர்களுக்கும் கடலூர் கூட்டமைப்பின் சார்பில் தோழமை நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
கூட்டமைப்பின் ஒவ்வொரு சங்கமும் பிரம்மாண்டமான கூட்டங்களை தனித்தனியே நடத்தியுள்ளவர்கள் தான் என்ற போதும், இணைந்து பெரிய அளவில் ஒரு மாநாடு என நிகழ்த்தியது நமக்கு புது அனுபவம். கருத்தரங்கம் நோக்கிய ஒவ்வொரு நகர்விலும் கூட்டமைப்பின் மாவட்ட செயலர்கள் பல முறை கூடி விவாதித்து நடைமுறைப்படுத்தினோம். அதுவே நமது வெற்றிக்கு அடிப்படை.
கருத்தரங்கில் உரையாற்றிய தலைவர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பிரதமருக்கு 1 கோடி கையெழுத்து பெறுவதில் சேலத்தை அடுத்து கடலூர் 2வது இடம் பெறுகிறது என்பதை அறிவித்து, முடிக்க வேண்டிய நமது இலக்கு இன்னும் உண்டு என்பதை நினைவூட்டி உள்ளனர்.
இதுவரை ஆற்றிய பணிக்கு, நன்றி தோழர்களே! தொடர்ந்து உழைப்போம்! அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர இயக்கம் காண்போம்!
தொடர்ந்து கையெழுத்து இயக்கம்
பிப்ரவரி 25 பாராளுமன்றம் நோக்கி பேரணி
மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
-தோழமையுடன்
K T சம்பந்தம் R ஸ்ரீதர் C பாண்டுரங்கன் P வெங்கடேசன்
No comments:
Post a Comment