வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்
BSNL ஊழியர்கள்
அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21, 22-2015 ஆகிய
தேதிகளில் நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் இன்று காலை
திண்டிவனத்திலும் மதியம் செஞ்சியிலும் மாலை விழுப்புரத்திலும் நடைபெற்றது.
கூட்டத்தில் NFTE மாநில உதவிசெயலர் தோழர். இராபர்ட்,
SNEA மாவட்ட செயலர் பாண்டுரங்கன், AIBSNLEA மாநில
உதவித்தலைவர் S.நடராஜன், BSNLEU மாவட்டசெயலர் தோழர்.K.T.சம்பந்தம், SNEA தோழர்.P.சிவக்குமரன்
ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினர். நமது மாநில உதவிசெயலர் தோழர்.இராபர்ட்
அவர்கள் தமது உரையில் வேலைநிறுத்தம் செய்வதன் அவசியத்தையும், வேலைநிறுத்தத்தை
நூறு சதம் வெற்றி அடைய நமது பங்களிப்பை முழுமையாக செலுத்த வேண்டியதன்
அவசியத்தையும், நமது நிறுவனம் தற்போதுள்ள பின்தங்கியுள்ள நிலையினையும், அதனை
செழுமைபடுத்த கூட்டு போராட்டத்தின் மூலமே அதனை சாதிக்க முடியும் என்பதனையும்
அதற்காக நமது வேலைநிறுத்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வலியுறுத்தி
பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர், மாவட்டத்தலைவர் தோழர்.செல்வம் கலந்து கொண்டனர்
திண்டிவனம் கூட்டம்
செஞ்சி கூட்டம்
விழுப்புரம் கூட்டம்
No comments:
Post a Comment