.

Monday, April 13, 2015

National Executive Committee Meeting Jaipur

NFTE மத்திய செயற்குழு கூட்டம் 09-04-2014 மற்றும் 10-04-2014  தேதிகளில் Pink City என்றழைக்கப்படும் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து  மத்திய செயற்குழு உறுப்பினர்கள்  தோழர்கள் பட்டாபி மாநிலசெயலர்,அகில இந்திய செயலாளர்  SSG, மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர்  புதுவை காமராஜ் ஆகியோரும் மாநில தலைவர் தோழர் லட்சம், தோழர் முரளிதரன் மற்றும் நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலர் தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட தலைவர் தோழர் செல்வம் மாவட்ட உதவி செயலர் தோழர் அழகிரி  ஆகியோரும்  உட்பட 25 தோழர்கள் கலந்துகொண்டனர்.
தேசியக்கொடி, சம்மேளனக்கொடி, உயர்த்தியபின் பொதுசெயலர் ஆய்படு பொருளை  முன் மொழிந்து விளக்கினார். மாநில , மாவட்ட மாநாடுகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடித்திட வலியுறுத்தினார். உறுப்பினர் சரி பார்ப்பை சந்திக்க கிளை செயலர் கூட்டத்தை மாநிலசங்கங்களும், மாவட்ட செயலர் உள்ளிட்ட விரிவடைந்த கூட்டத்தை மத்தியசங்கமும் நடத்திட திட்டமிட்டு ஜனவரி2016க்குள் நடத்திட வேண்டும். ஏப்ரல் 21&22 தேதிகளில் வேலைநிறுத்தம், டெல்லி பேரணி, மாநில கருத்தரங்கம். கோரிக்கை, நிர்வாகத்தின் நிலை, கவுன்சில்கள் செயல்பாடு ,மாற்று சங்க தடை செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்கினார்.
தலைவர் இஸ்லாம் நமது தேர்தல் அறிக்கையை செயல்படுத்திட நமது முனைப்பான செயல் பாடு, போனஸ் திட்டம், குறித்து விளக்கினார்.
பின்னர் பேசிய மாநிலசெயலர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள், வேலைநிறுத்தம், மாநில கருத்தரங்கம். உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்தனர்.
நமது மாநில செயலர் தோழர் பட்டாபி அவர்களின் உரை அனைவரும் உற்று நோக்கம் வண்ணம் சிறப்பாக இருந்தது. ஓய்வூதியத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும், BSNL வருவாய் பெருக்கம் குறித்தும், ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை போக்க அதாலத் போன்ற நடைமுறை படுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆற்றிய உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
STR மாவட்ட சங்கம் குறித்து மத்திய சங்கத்தின்  உறுதியான நிலைப்பாட்டை  வரவேற்கிறோம் .

சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்த ராஜஸ்தான் மாநில சங்கத்திற்கு நமது பாராட்டுக்களும் நன்றிகளும் 















No comments:

Post a Comment