.

Thursday, April 2, 2015

மாதம் தோறும்  7 ம் தேதி
 சம்பளம் உறுதியாக்கிட !
EPF முறைகேடு ஒழித்திட, ஒழுங்குபடுத்திட! 
மாநிலம் தழுவிய போராட்டம் மே மாதம் 
அறைகூவலிட்ட TMTCLU மாநில செயற்குழு 
கடலூரில் 2-04-2015 அன்று நடைபெற்றது. காலை 9-30 மணிக்கு தோழர்.தமிழ்மணி  அவர்கள் தேசியக்கொடி ஏற்ற, தோழர்.சேது அவர்கள் TMTCLU சங்கக்கொடியை ஏற்றி செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். TMTCLU கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.G.ரங்கராஜ் வரவேற்புரை நல்க செயற்குழு இனிதே துவங்கியது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் அஞ்சலி உரையாற்றினார். தஞ்சை தோழர்.S.நடராஜன் துவக்கவுரையாற்றினார். மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம் சங்கத்தின் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்து விளக்கவுறையாற்றினார். TMTCLU மாநிலப் பொருளர் தோழர்.M.விஜய் ஆரோக்கியராஜ் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்து பேசினார். தோழர்.கிள்ளிவளவன் அமைப்பு நிலைபற்றி பேசினார். கடலூர் மாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் தோழர்.T.மணிவாசகம், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொதுசெயலர் தோழர்.K.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத்தலைவர் தோழர்.லட்சம்,   தோழர்கள். மாநில துணைப் பொதுச்செயலர் தோழர்.சுப்ரமணியன்-விழுப்புரம், V.நல்லுசாமி-ஈரோடு, செல்வராஜ்-சேலம், மாரிமுத்து-காரைக்குடி, கலை-தஞ்சாவூர், முனியன்தர்மபுரி, முருகேசன்மதுரை, மாரி-காரைக்குடி, , கடலூர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். தோழர்.தமிழ்மணி ,தோழர்.சென்னகேசவன், தோழர்.காமராஜ், தோழர்.ஆர்.கே. ஆகியோர் சிறப்புரையாற்ற, மாநிலசெயலர். தோழர்.பட்டாபி அவர்கள் நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத் தலைவர் தோழர்.குமார் நன்றியுரை வழங்கினார்.

மாநிலமே வியக்கும்வண்ணம் கடலூரில் மாநிலச்செயற்குழு சிறப்பாக நடத்திட நிதி அளித்திட்டவர்களுக்கும், நிதி அளித்திட்ட மாவட்டங்களுக்கும், சிறப்பாக உணவு அளித்து, அதற்கு சிறப்பாக உதவிட்ட தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றியை உரித்தாக்குகிறோம்.

















No comments:

Post a Comment