சேலம் மாவட்ட மாநாடு
26-05-2015 அன்று இனிதே
நடைபெற்றது . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினரும், ஈரோடு மாவட்டசெயலரும்,
மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலருமான தோழர்.
த.ஸ்டாலின் குணசேகரன் எழுச்சியான துவக்க உரை நிறைவான உரையாக அமைந்தது.
மாநில செயலர் தோழர் பட்டாபியின்
அறிக்கைகளைத் தொகுத்து “பட்டாபி 100” என்ற நூலை சேலம் மாவட்டத்தின் சார்பாக முதல் பிரதியை தோழர்.ஆர்கே
வெளியிட, சேலம் மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழுத்தலைவர். M.சுப்பிரமணியன்
அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் அறிமுகவுரையை மாநில உதவி செயலர் தோழர். தஞ்சை K.நடராஜன்
வழங்கினார். இந்நூல் வெளியிட கடுமையாக உழைத்த குடந்தைத் தோழர்.விஜய் ஆரோக்கியராஜ்
அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
மாநில செயலர் தோழர் பட்டாபியின் எழுச்சிமிகு
சிறப்புரையில் நடந்து முடிந்த வேலைநிறுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தை விளக்கினார். தொழிற்சங்கத்தில் சேலம் பகுதியின் பங்களிப்பை
எடுத்துரைத்தார்.
கருத்துரை வழங்கினர் மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர்
தோழர்.P.காமராஜ், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.K.சேது.
தோழர். ஆர்.கே நிறைவுப்பேருரை ஆற்றினார்.
நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உடன்
நமது மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.P.அழகிரி கலந்துகொண்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டிற்கான மண்டபம் முதல் ஊரின் பல பகுதிகளிலும் தோரணங்கள், விழா மேடை அமைப்புகள்,
உணவு உபசரிப்புகள், சிறப்பான ஆண்டறிக்கை, சிறப்பு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும்
சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட பொதுமேலாளர், மற்றும் பல அதிகாரிகளும்
கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைத்து தோழமை சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டது
சிறப்பாக இருந்தது. மாநாட்டினை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர்.C.பாலகுமார்
மற்றும் இதற்காக உழைத்திட்ட தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்ட தலைவர் தோழர் S.சின்னசாமி, மாவட்ட செயலர் தோழர்.C.பாலகுமார், மாவட்ட பொருளராக தோழர்.S.காமராஜ்
ஆகியோருக்கும் கடலூர் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment