TMTCLU மாவட்ட செயற்குழு –கடலூர்
அடிமட்ட தொழிலாளர்களுக்காக போராடிய ஒப்பற்ற தலைவர் தோழர்.ஜெகன் பிறந்த நாளான மே-17 ஆன
இன்று இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்து தமிழ் மாநிலம் முழுவதும் கொண்டாடி
வருகிறோம். இந்நாளில் தமிழ் மாநிலத்திலேயே முதன் முதலாக கடலூரில் TMTCLU சார்பில்
சங்கக்கொடி ஏற்றப்பட்டது. சங்கக் கொடியை TMTCLU மாநில துணை செயலாளர்
தோழர் A.சுப்பிரமணியன்-விழுப்புரம் பெரும் கோஷத்துக்கிடையே ஏற்றினார். அதனைத்
தொடர்ந்து கடலூர் மாவட்டசெயற்குழு நமது சங்க வாயிலில் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர்.M.S.குமார்
தலைமையில் தொடங்கியது. மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு அறிமுக உரையாற்றினார்.
மாநில இணைப்பொதுசெயலர் மூத்த தோழர் S.தமிழ்மணி
சங்க வரலாற்று நிகழ்ச்சிகளை தொகுத்து துவக்க
உரையாற்றினார். தஞ்சை மாவட்ட சங்க மாவட்டஉதவி செயலர் தோழர்.கிள்ளிவளவன் அவர்கள்
தனது சிறப்புரையில் கேஷுவல் மஸ்தூர் தொடங்கி TTA வரை தன்னை ஆளாக்கிய நம்
சங்கத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் தோழர்கள் V.இளங்கோவன்-அமைப்பு செயலர்-TMTCLU,
V.முத்துவேலு மாவட்ட அமைப்பு செயலர்-TMTCLU, D.குழந்தைநாதன் மாவட்ட துணை செயலர்-NFTE
ஆகியோரும், ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் தோழர்கள் V.வீராசாமி-விருத்தாசலம்,
S.பாலமுருகன்-பண்ருட்டி, S.ராமசாமி,A.சுப்பிரமணி-விழுப்புரம்,
சுந்தர்-சிதம்பரம் P.ராஜா-கள்ளகுறிச்சி, ஜானகிராமன்-திண்டிவனம், S.அழகப்பன்-உளுந்தூர்பேட்டை
ஆகியோர் பேசினர். NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். நன்றியுரை S.வீராசாமி வழங்கினார்.
கூட்டத்திற்கு தேனீர்,வடை வழங்கிய தோழர்.D.குழந்தைநாதன்,
மதிய உணவு ஏற்பாடு தோழர்கள் V.முத்துவேல், P.குமார், மதிய உணவிற்கு மாம்பழம்
வழங்கிய தோழர். திண்டிவனம் J.ஜெயச்சந்தர், வாழைபழம் வழங்கிய NFTE மாவட்ட
துணைசெயலர் தோழர். P.அழகிரி, பலா சுளைகள் வழங்கிய தோழர்.G.ரங்கராஜுஆகியோருக்கு
மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்கிறோம்.
மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்;
- உறுப்பினர்களாக உள்ள 120 பேரில் 60 பேரிடம் மட்டுமே சந்தா வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களிடமும் சந்தா வசூலிக்க வேண்டும்.
- தலைமை பொது மேலாளர் உத்தரவின்படி பிரதிமாதம் 7-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படவேண்டும்.
- ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட அளவில் தனி அதிகாரி நியமிக்கவேண்டும்.
- சிதம்பரம் கோட்டப்பொறியாளரின் ஒப்பந்த ஊழியர்கள் மீதான விரோதப்போக்கினை இம் மாவட்ட செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
- மாவட்டம் முழுதும் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு UAN முறையில் EPF முறையாக செலுத்தப்படவெண்டும்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் இணைந்து அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.
- விழுப்புரம் பகுதி ஒப்பந்த உழியர்கள் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தப்படவேண்டும்.
- ஜுன் 10 – ல் இரண்டு சங்கங்களின் சார்பில் சென்னையில் நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்க பெரும் திரளாக கலந்து கொள்வது.
- ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க NFTE மாவட்ட சங்கத்துடன் இணைந்து கடலூரில் மே-23 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துவது எனவும் இம் மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment