ESI அடையாள
அட்டை
ZONE-2, ZONE-3, ZONE-4-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் ESI அடையாள அட்டை வழங்குவதற்கான
புகைப்பட முகாம் 16-06-2015 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின்
பேரில் ESI நிர்வாகத்தினர் இந்த முகாமை நடத்துகின்றனர். தோழர்கள்
தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர இயலாதவர்கள், இருக்கின்றவர்களை வைத்து புகைப்படம்
எடுத்துக்கொள்ளலாம். அடையாள அட்டை பெற்றுக்கொண்ட பின் சேர்த்தல் நீக்கல் செய்ய
இயலும். ஏற்கனவே அடையாள அட்டை பெற்று அதில் ஏதேனும் திருத்தும் செய்துகொள்ள
விரும்புபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment