.

Sunday, July 26, 2015

சிதம்பரம் கிளை பொதுக்குழுகூட்டம்


பொதுக்குழுகூட்டம் 25-07-2015 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தை கிளை தலைவர் தோழர் K.நாவு தலைமை ஏற்று வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.தோழர் S.வரதராஜன் TTA அவர்கள் கேபிள் பற்றிய வரைபடம் அந்தந்த பகுதில் உள்ள TM மற்றும் ஏற்கனவே அந்த பகுதியில் பணியாற்றிய தோழர்களை கொண்டு தயாரித்தால் கேபிள் பழுதுகளை விரைவாக நீக்கமுடியும் மேலும் வருங்காலத்திலும் இந்த வரைபடம் பயனுள்ளதாக அமையும் என ஆலோசனை கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது. அண்ணாமலை நகர், புவனகிரி பகுதியில் சில பில்லர்கள் பழுதடைந்து தளம் போடப்பட்டு பல வருடம் ஆகியும் பில்லர் பராமரிப்பு பணி நடைபெறவில்லை. நகர பகுதிகளில் புதியதாக கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தேவையான கேபிள்களை போட்டு வைத்தால் புதிய இணைப்பு வழங்க பயனுள்ளதாக அமையும் எனவும் தோழர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள் சிறப்புரையாற்றி இன்றைய நிகழ்வுகளை எடுத்துக்கூறினார்.பொதுக்குழுவை மாதம் ஒரு முறை நடத்தினால் பிரச்சனைகள் தீர்வில் காலதாமதம் ஏற்படாது.கேபிள் பணிக்கான புதிய ஒப்பந்தம் இந்த மாதம் போடப்படும் அதனால் கேபிள் பணிக்கான ஆள் பற்றாக்குறை தீர்க்கப்படலாம். சில பொதுத்துறைகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருக்கிறது. NLC ஊழியர்களுக்கு 2007 க்கு பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் அதனடிப்படையில் 2012 ல் வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருப்பதை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதுபோல் BSNL நிறுவனத்தில் BSNLEU வின் தவறான ஊதிய உடன்பாட்டால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலை ஆனதால் நமக்கு 2012 ல் கிடைக்கவேண்டிய ஊதிய மாற்றம் 2017 க்கு மாறியது.புதிய ஊதியம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நமது துறை லாபமீட்டும் துறையாக மாறினால் தான் கிடைக்கும் அகவே நமது தோழர் இன்னும் சிறப்பாக களப்பணியாற்றவேண்டும் என மாவட்ட செயலர் வலியுறித்தினார் சிதம்பரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று ஒருமாதமாகியும் இன்றுவரை ஊழியர்களுக்கு தேவையான HMT, CRONE TOOL மற்றும் எவ்வித  உபகரணங்களும் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டும். மேலும் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து உபகரணங்களும் வாங்கி தர நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட செயலர் தனது உரையில் கூறினார்..


No comments:

Post a Comment