.

Thursday, August 6, 2015

வாராது வந்த மாமணிஎங்கள் அப்துல்கலாம்

எஸ்ஸார்சி

 

அப்துல் கலாம் மறைந்துவிட்டார். ஆம் நம் கண்கள் பனிக்கின்றன. இந்திய சாதாரண மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன்.
விதிவசத்தால் கால்கள் ஊனமாகி ஆனால் எப்படியும் நடக்கத்தான் வேண்டும் என முயலும் மனிதர்க்குத் தரப்படும் செயற்கைக்காலகள் எடைமிகக்குறைந்து அவனுக்கு அது சுகம் தரவேண்டுமென எண்ணி அதன்பாரம்குறைத்த. குணவான். ஒரு அணு விஞ்ஞானி இந்திய விண்ணியல் செயல்பாடுகள் உலகை பிரமிக்கவைக்க அடித்தளமிட்ட மாமனிதர்களின் திருக்கூட்டத்துத்தலைவன். ராமேசுரம் எனும் குட்டித் தீவில் தீவில் ஒரு அரசாங்கத்து ஆரம்பப்பள்ளியில் தமிழ் வழி பயின்றதால் கூட அக்னிச்சிறகுகள் அவருக்கு முளைத்திருக்கக்கூடும். சமீபமாய் கலாம் அவர்கள் சோசப் கல்லூாயில்தனக்குப் பவுதிகம் பயிற்றுவித்த ஆசிரியரைக்கண்டு வணங்கிய வரலாற்றுக்காரர். இசை அரசி சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா கவுரவ விருது தர சென்னையில் அவர் இல்லம் சென்று மரணப்படுக்கையில் இருந்த அவருக்கு புன்னகை முகிழ்க்கக்காரணமானவர்.
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சொந்தச் சிற்றூரின் ஆரம்பப் பள்ளி  ஆசிரியர்களையும் நண்பர்களையும் உறவுகளையும் தன் சொந்தச்செலவில் சாதாரண ரயில் வசதியில் டில்லிக்கு அழைத்துச்சென்று தன் ஆகப்பெரும் பதவி ஏற்புகாண வைத்த குழந்தை மனசுக்காரர்.
வேத உப நிடத கருத்துக்களில் ஆழத்தோயும் பெருமனிதர் கலாம். நடிகர் விவேக் தன்னைத் தொலைக்காட்சியில் பேட்டி காணவந்தபோது மகிழ்ந்துபோனவர். இப்படியும் சாத்தியமா என்று எண்ணி எண்ணி சிறிய மனசுக்காரர்கள் அதிர்ந்துபோனார்கள்.
கன்னியாகுமரியில் கம்பீரமாய் நிற்கும் திருவள்ளுவர் சிலை வளாகத்தில் குறள் மீது கலாம் கொண்ட காதலால் தன் குறிப்புக்களை தந்து அவை அந்த கல்பலகையில் இன்றும் ஒளிர்கின்றன. நற்பணி முடித்திட்ட அப்போதைய முதல்வர் திரு. கருணாநிதி  அவர்கள்  அவர் மீது கொண்டுள்ள அளப்பரிய மரியாதையை  நாம் உணர இது ஓர் வாய்ப்பு இளைஞர்களை நேசித்த உத்தமர். அவர்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். இந்திய மனித ஆற்றலை அடிமனதின் ஆழத்திலிருந்து நேருவுக்குப்பிறகு தரிசித்த நேர்மையாளர்.
இந்தியாவைத்தன் குடும்பமாகப் பார்த்து அனுபவித்தவர். தேவையில்லாத ஒரு சிறு சொல்லையும் அவையில் பயன்படுத்தாத மனித எடுத்துக்காட்டு. படகுக்காரனின் மகன். மீனவர்களின் நண்பன். மத இன மொழி வேறுபாடு கடந்து மக்கள் அவரை நேசித்தனர். இவ்வுயரிய பதவிக்கு அன்னாரைத் தேர்வு செய்தவரும் ஒரு பெரியமனதுக்காரரே.
டில்லி விமான நிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனம் அவர் மாண்பு போற்றாது அவரை ஆய்வுசெய்து பயணிக்கச்செய்ததுண்டு. சிறியவை பொருட்படுத்தாத பக்குவ மனிதரே கலாம்.
பட்டினிச்சாவுகளும் பளிங்கு மாளிகைகளும் எம் தேசத்தில் உண்டு. புத்தனும் காந்தியும் அம்பேத்கரும் கலாமும் இங்கே பிறந்ததால் சுடும் ரணங்களை. எம்மக்கள் பெரிது படுத்த விரும்பவது இல்லை.
கலாம் ஏற்றிய மனித நேய மாண்பு ஒளி பாரதத்தை நம்பிக்கையோடு இனி வழி நடத்தட்டும்.


No comments:

Post a Comment