.

Friday, September 25, 2015


தோழர் K. செல்வராஜ் STS,கடலூர்
பணி ஓய்வு பாராட்டு விழா

19-09-2015 தியாகிகள் தினத்தன்று மாவட்ட அலுவலக்கிளை சார்பில் தோழர்கள் அனைவராலும் K.S எனஅன்புடன் அழைக்கப்படும் தோழர் K.செல்வராஜ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கிளைத்தலைவர் தோழர் D.துரை அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டஉதவிச்செயலர் தோழர்D.குழந்தைநாதன்  அனைவரையும் வரவேற்றார். மாநிலத்துணைத்தலைவர் தோழர் V. லோகநாதன் தமது துவக்க உரையில் தோழரின் சங்கப் பங்களிப்பைச் சிறப்பாக எடுத்துரைத்தார். இன்றைய நாள் (செப்டம்பர்’19) 1968-ல் நடைபெற்ற  அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அன்றைய வேலைநிறுத்தத்தின் காரணமாக டெல்லிதெருவில், இந்திரபிரஸ்தில், மரியானியில், பொங்கைகான் போன்ற பல இடங்களில் ஊழியர்கள் சுடப்பட்டு உயிர்த்தியாகம் செய்த வரலாற்றைக் கூறி அதன் வழியில் செப்டம்பர்-2 பொது வேலை நிறுத்தம் உள்பட அனைத்து இயக்கங்களிலும் பங்கேற்றவர் தோழர் செல்வராஜ் என புகழ்ந்துரைத்தார்.
                அடுத்து தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை நடைபெற்றது.  SNEA சார்பில் தோழர் பால்கி அழுத்தமாக தோழர் KS-ன் சமூக பங்களிப்பை நினைவு கூர்ந்தார். மற்றவர்கள் பணிக்கு வரமுடியாத பதட்டமான சூழ்நிலையிலும் நெல்லிக்குப்பத்தில் பணி இல்லாத போதும், பணிக்கு வந்து மாநில அரசு நிர்வாகத்திற்கு உறுதுணையாக அமைதிகாக்க பணியாற்றியவர் மேலும் அன்றைய நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அமரர் தோழர் C.G  அவர்கள் தோழர் செல்வராஜ் எப்படி இருக்கிறார் என்று விசாரிக்கும் அளவுக்கு சமூக உணர்வோடு பணியாற்றிய தோழர் K.S. எனப் புகழ்ந்தார்.
                            AIBSNLEA சார்பில் தோழர் K. தனசேகரன், FNTO மாவட்டச் செயலர் தோழர் R. ஜெயபாலன், SNATTA மாநிலத்தலைவர் தோழர் D.சிவசங்கர், PEWA மாவட்டச்செயலர் தோழர் V. நல்லதம்பி , BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர் A.அண்ணாமலை, ஓய்வுபெற்ற நமது மூத்த தலைவர் P.ஜெயராமன்  மற்றும் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் K.அம்பாயிரம், Pஅழகிரி, ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் TMTCLU மாநில பொதுச் செயலர் தோழர் R. செல்வம்,ணைப்பொதுச் செயலர் தோழர் S. தமிழ்மணி அவர்களும்,TMTCLU மாவட்டச் செயலர் தோழர் G. ரங்கராஜ் அவர்களும்   தோழரை வாழ்த்தி பேசினார்கள். நமது மாவட்டச் செயர் தோழர்.இரா.ஸ்ரீதர்  தோழர் KS அவர்களின் உதவும் தன்மையும், உபசரிக்கும் பண்பையும், அவரது குடும்பத்தினரின் நல்லியல்புகளையும் மனம் திறந்து  பாராட்டினார். பொதுத்துறை நிறுவனங்களை நவீன ஆலயங்கள் என்ற நேரு, கல்வியும் மதிய உணவும் தந்த கர்ம வீரர் காமராசர் படங்களை தட்டியில் போட்டதற்கான காரணங்களையும் தெரிவித்தார். மேலும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இடதுசாரித் தத்துவத்தை உயர்த்திப்பிடித்த தோழர் V.ரகுநாதன் SDE அவர்களுக்கு பொதுவாக நடந்த பாராட்டு விழாவினையே புறக்கணித்த நண்பர்கள்  இந்த விழாவைப் புறக்கணித்திருப்பது ஆச்சரியமில்லை என்பதனை உணர்ச்சியோடு பதிவு செய்தார். அடுத்து அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர் P.காமராஜ் கடலூரில் KS-உடன்  பணியாற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
                இறுதியாக மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்கள், ”தோழர் செல்வராஜ் அவர்களுக்கு நேருவையும் காமராசரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர்கள் வணக்கத்துக்குரியவர்கள். தோழர் செல்வராஜ் பணிக்கு வந்த போது சம்பளம் குறைவு. அவருடைய குழந்தைகளும் சாதாரண பள்ளிகளிலேயே படித்திருப்பர். ஆனால் அவருடைய பேரக் குழந்தைகள் சாதாரணப் பள்ளியில் சேர்க்க முடியுமா? ஏனெனில், இன்று  நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதனை முடிவு செய்யும் அதிகாரம் கார்பரேட் நிறுவனங்களும் அரசும் தான் முடிவு செய்கிறது. காலங்காலமாக நாம் கும்பிட்ட நேசித்த பிள்ளையார் சிலைகள் இன்று கடத்தப்படுவது போல் நடைபெறுகிறது. நமக்கு பென்ஷனை உறுதி செய்ததும், கூடுதலாகப் பெற்றுத் தந்ததும் தோர் குப்தா. நடந்து முடிந்த மூன்று வேலை நிறுத்தங்களும் கூட்டு இயக்கமே. இந்த விழாவும் அனைவரையும் அழைத்து ஒற்றுமையாக நடத்துகிறீர்கள். அந்த போராட்டங்களில் பல பிரச்சனைகள் கேடர்கள் பெயர் மாற்றம், TTA இன்கிரீமென்ட், JTO பணி நியமனம் என தீர்வை நோக்கிச் செல்கின்றது.
                இன்றைக்கு வளர்ச்சி பெற்றுள்ள 100 கோடி தொலைபேசி இணைப்புகளில், 20 கோடிதான் BSNL தந்தது. ஆனால் பொதுத்துறையான BSNLதான் 2 ½ லட்சம் பேருக்கு வேலை தந்துள்ளது. மற்றைய எல்லா தனியார் நிறுவனங்களும் மொத்தமாக 1½ லட்சம் பேருக்கு கூட வேலை தரவில்லை என்பது மட்டுமல்ல, நிரந்தரப் பணி என்பதும் இல்லை. JOBLESS GROWTH என்ற இந்த கார்பரேட் கலாச்சாரம் அபாயகரமானது.
            ரயில் போக முடியாத, தபால் போக முடியாத இடங்களிலும், BSNL போகிறது. 65,000வர்கள் உள்ளது. 400 லட்சம் சதுர மீட்டர் நிலம் சொந்தமாக உள்ளது, சக்தி வாய்ந்த ஸ்பெக்ட்ரம் உள்ளது. இவையெல்லாம் திருடப்பட முயற்சி நடக்கிறது. இதைக் காக்கவே நமது போராட்டங்கள். இந்தப் போராட்டங்களில் எல்லாம் தோழர் செல்வராஜ் அவர்களின் பங்கு இருக்கிறது என்பது பெருமைக்குரியது. அவரது ஓய்வுக்காலம் சிறப்புடன் அமைய வாழ்த்துகிறேன்” என்றார்.
                பின்னர், தோழர் K.செல்வராஜ் தமதுஏற்புரையில் நெகிழ்வான தமது தொழிற்சங்க அனுபவங்களைப் பதிவு செய்தார். தோழர்.அபிமன்யுவுடன்  டெல்லி சென்றது. தோழர் சுகுமார் அவர்களுடன் Enquiry 197-ல் பணியாற்றியது, தற்போது கடந்த மாவட்ட மாநாட்டிற்கு பிறகு தோழர் ஸ்ரீதருடன் தனக்குள்ள நெருக்கத்தையும், பல நெருக்கடியிலும் மாவட்ட சங்கத்தை சிறப்புடன் நடத்துவதையும், லிக்கதிர் பொன்விழா மாநாட்டிற்கு உழைத்த அனுபவங்களை பற்றிக் கூறி நன்றி கூறினார்.
                கிளைச் செயலர் பொறுப்பு தோழர் P.ஜெயராஜ் நன்றி கூறினார்.தோழர் செல்வராஜ் அவர்களுக்கு கிளை சார்பில் தோழர் ஜெயராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்த தோழர் துரை அவர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
                தோழர் செல்வராஜ் அவர்கள் நமதுமாநிலச் சங்கத்திற்கு ரூ2000/-ம் மாவட்ட சங்கத்திற்கு ரூ1000/-ம், கிளை சங்கத்திற்கு ரூ1000/-ம், TMTCLUமாவட்ட சங்கத்திற்கு 1000/-ம் நன்கொடையாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான விருந்தினை CSC அலுவலக வளாகத்தில் வழங்கினார். சிறப்பான ஏற்பாடுகளை கிளைத்தோழர் A.S.குருபிரசாத் மற்றும் ஒப்பந்த ஊழியர் தோழர்கள் செய்திருந்தனர்.

                அனைவர் மனதிலும் நிறைந்த விழாவாக பணி நிறைவு விழா குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது.       








1 comment:

  1. Thanks for all those who attended and congratulated. k.selvaraj cuddalore.

    ReplyDelete