பண்ருட்டி கிளை
மாநாடு
அக்டோபர் 09-ந் தேதி கிளை செயலர் தோழர் S.பாஸ்கரன் அக்டோபர் 24-ல் கிளை
மாநாடு நடத்த அறிவிப்பு செய்தார். அதே சமயம் பண்ருட்டி கிளைத் தோழர் P.முருகன் தன்னிச்சையாக
அதே தேதியில் மாநாடு அறிவித்தார். இதனை தொடர்ந்து தோழர்.P.முருகனிடம்
மாவட்ட சங்கத்தின் அறிவுரைப்படி பண்ருட்டி கிளை செயலர் தோழர்.S.பாஸ்கரன்,
கிளைத்தோழர்.G.ரங்கராஜு ஆகியோர் ஒற்றுமையாக மாநாட்டை நடத்த ஒத்துழைக்கும்படி வேண்டி பேச்சுவார்த்தை
நடத்தினர். மாவட்ட செயலரும் தோழரிடம் பேசி மாநாட்டை நிறுத்தி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்படி
வேண்டினார். இறுதியாக 23-10-2015 இரவு மாநிலப் பொருளர் தோழர் K.அசோகராஜன் அவர்களும் முருகனிடம் பேசி
மாநாட்டை நிறுத்தும்படி வேண்டியுள்ளார். இருப்பினும் தோழர் P.முருகன்
இதனை ஏற்றுக் கொள்ளாமல் எனது மேலிடத்தின் உத்தரவுப்படி தான் தனித்து மாநாட்டை
நடத்துவேன் என விடாப்பிடியாக மறுத்தார்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி கிளை செயலர் தோழர் S.பாஸ்கரன்
அறிவித்தபடி கிளை மாநாடு 24-10-2015 சனிக்கிழமை காலை பண்ருட்டியில் உள்ள கடலூர் மாவட்ட AITUC தலைமை
அலுவலகத்தில் கிளைத்தலைவர் தோழர் T.வைத்தியநாதன் தலைமையில் சம்மேளனக் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. கிளை
செயலர் தோழர் S.பாஸ்கரன் மாநாட்டிற்கு வந்திருந்த
அனைவரையும் வரவேற்றார். தோழர் G.ரங்கராஜு
அஞ்சலியுரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் துவக்கவுரை நிகழ்த்தினார். கிளைசெயலர் தோழர் S.பாஸ்கர்
ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர்
அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டபடி
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைத்தலைவராக தோழர் T.வைத்தியநாதன், கிளைசெயலராக தோழர் S.பாஸ்கரன்,
கிளைப் பொருளாளராக தோழர். P.லட்சுமணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நெய்வேலி கோட்டப்பொறியாளர்
திரு.P.சிவக்குமரன் அவர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை
வழங்கி, இன்றைய கட்டத்தில் நமது துறையினை முன்னெடுத்து செல்ல சங்கங்கள் இடையே
ஒற்றுமை தேவை என வலியுறுத்திப் பேசினார். பின்னர் புதுவை மாவட்ட செயலர்
தோழர் M.செல்வரங்கம், மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம்,
மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி, மற்றும் பண்ருட்டி BSNLEU கிளைச்செயலர் தோழர்.T.சுந்தர்
உள்பட மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகள், மற்றும் கடலூர் AITUC மாவட்டப் பொதுச்செயலர் தோழர்.P.துரை. ஆகியோர்
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். கிளை தோழர் P.லட்சுமணன்
நன்றி கூறினார். கிளை மாநாட்டில் புதுவை தோழர்கள், மற்றும் மாவட்டம் முழுவதும்
இருந்து முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாட்டு
நிகழ்வுகளை பண்ருட்டி தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment