.

Thursday, October 15, 2015

பாரத ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாம்
பிறந்தநாள் விழாவும் திருஉருவப் படத் திறப்பு விழாவும்

NFTE  மாவட்ட சங்க அலுவலகத்தில் 15-10-2015 வியாழன்  உணவு இடைவேளையின் போது பாரத ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழாவும் திருஉருவப் படத் திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
     தோழர் சிரில் நினைவு அறக்கட்டளையின் தலைவர் தோழர் , சீனுவாசன் தமது தலைமையுரையில் கலாம் பற்றிய கவியரசு கண்ணதாசன் கவிதையை உணர்ச்சிப் பெருக்கோடு கூறி நல்ல துவக்கம் செய்தார்அறக்கட்டளையின் செயலாளர் தோழர் வீ.லோகநாதன் வந்திருந்த அனைவரையும் காலம் கருதி சுருக்கமாக வரவேற்றார்.
     வாசிப்போர் இயக்கத் தலைவர் கவிஞர் பால்கி கலாம் பற்றியும் சிறப்புச் சொற்பொழிவாளர்ஆயிஷாதிரு, இரா. நடராஜன் பற்றியும் சிறப்பாக அறிமுக உரையாற்றினார்தோழர் பால்கி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் தோழர் R. செல்வம் கைத்தறியாடை அணிவித்து கௌரவித்தார்.
ஓய்வு பெற்ற நமது மூத்த தோழரும் மேனாள் மாவட்டப் பொறுப்புச் செயலாளருமான தோழர் , பக்கிரி அவர்கள் மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருஉருவப் படத்தினை கரவொலிக்கிடையே திறந்து வைத்தார். மாவட்ட அலுவலகக் கிளையின் தோழர் சு. குருபிரசாத் அவர்கள் மரியாதை செய்தார்.
அடுத்து அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தச் சிறப்பு விருந்தினர் கடலூர் தனியார் பள்ளியின் முதல்வரும், பலபுத்தகங்களின் ஆசிரியரும், ’பால சாகித்திய அகெடமி விருதுபெற்றவருமானஆயிஷாதிரு, இரா. நடராஜன் அவர்களின் பேரருவி போன்ற ஆழமான சொற்பெருக்கு கேட்டோர் அனைவரையும் கட்டிப்போட்டதுகலாம் பற்றி யாரும் எங்கும் கேட்டிராத தனித்துவமான உரை, திரும்பத் திரும்ப மேலோட்டமாக சொல்வதிருந்து மாறி கலாம் அவர்களை புதிய கோணத்தில் அறிமுகம் செய்தார். அவரது உரையிலிருந்து. . .
இன்று பிறந்தநாள் விழா என்றாலே வசூல் என்று ஆகிவிட்டிருக்கிறது, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த விழா. மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தி பகுத்தறிவு சிந்தனை வளர்த்த தபோல்கர் கொல்லப்பட்டிருக்கிறார். தலித் வீதிகளில் வராத பிள்ளையார் சிலைகள் முஸ்லீம் தெருக்களில் தான் போவேன் என்று பிடிவாதம் செய்வதை விமர்சித்த கர்புல்கி கொலையானார்நாட்டின் சூழல் இது. இங்கிருந்து பெரிய பதவிக்குப் போவதென்பதே நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றுஅப்படி பெரிய பதவியில் அமர்ந்த பின் கீழே பார்ப்பதோ வருவதோ மிகவும் ஆச்சரியமான ஒன்று. அப்படிப்பட்ட மனிதர் தான் அப்துல் கலாம். அவர் குறித்து மூன்று செய்திகளை வித்தியாசமாகச் சொல்வார்கள்.
1.   ஜனாதிபதி மாளிகையில் இருந்த ஒரே ஒரு பேச்சிலர் (பிரம்மச்சாரி)
2.   ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் போது எத்தனை பெட்டிகளோடும் புத்தகங்களோடும் சென்றாரோ, அதோடு மட்டுமே வெளியேறிய மனிதர்.
3.   ஜனாதிபதி மாளிகையில் வசித்த மற்ற மனிதர்கள்.

முதல் முறையாக கலாம் அவர்கள் மாளிகையின் சமையல் கட்டிற்குச் சென்றார். 600 பேர்களுக்கு சமையலுக்குத் தேவையான சமையல் பொருள்களும் சாப்பாடும் தயாராகிக் கொண்டிருந்தது. ’யாருக்கு?’ என்று கேட்டார். உங்களுக்காகத்தான் என்றார்கள். ’பிறகு உங்களுக்கான உணவு எங்கே?’ என்று கேட்டபோது அது வேறு சமையலறையில் என்றார்கள். ஆனால் அவர் விரும்பியும் அவரால் உடனடியாக அதைச் சென்று பார்க்க முடியவில்லை. காரணம் ஜனாதிபதிக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள். (நீங்கள் யாரும் ஜனாதிபதியாக விரும்பாதீர்கள். நீங்கள் விரும்பிய எதையும் செய்யமுடியாதுஜனாதிபதியாக இருப்பது என்பது மிகக் கடுமையானது)
கலாம் அவர்கள் மறுநாள் மதியம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைப்பார்த்தபின் அவர் கூறியது : “ எனக்கும் இங்கேயே சமைத்து விடுங்கள்“.  அவ்வளவு எளிமை அது தான் அப்துல் கலாம். இதனை நீங்கள் நமது நிலையிலேயே மற்ற மற்ற அதிகாரிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நீங்கள் உணரமுடியும்,
கலாம் அப்படி என்ன செய்தார்நான் நினைக்கிறேன் நமது நாட்டு மக்கள் இவ்வளவு ஆண்டுகாலம் தேடிக் கொண்டிருந்த ஒன்று அவரிடம் இருந்தது, கலாம் அவர்கள் 23 புத்தகங்கள் எழுதியுள்ளார், 24 வது புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும் போது மறைந்து விட்டார். அதுவும் வெளிவரஉள்ளது. கூகிளில் தேடிப் பார்த்த போது காந்தி பற்றி மற்றவர்கள் எழுதிய புத்கங்கள் 1,26,000 என்று வந்தது. கஸ்தூரிபாய் பற்றி 2 புத்தகங்கள் மட்டுமே அவற்றில் ஒன்று பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ள மைதிலி சிவராமன் அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பு. கலாம் பற்றி எவ்வளவு பேர் எழுதியிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? 4 லட்சத்து 70 ஆயிரம் புத்தகங்கள் என பதிவாகியுள்ளது. இன்றைய நிலையில் நீயூஸ் பேப்பர் படிப்பதே பெரிய அச்சீவ்மெண்டாக உள்ளதுஅவ்வளவு புத்தகங்கள். படித்திருக்கிறோமா என்றால் உண்மை படிக்கவில்லை மற்றவர்கள் சொல்லி கேட்டதது தான் என்கிறார்கள்காந்தியை வானளாவப் புகழ்ந்து உச்சியில் வைத்து அற்புதமாகப் பேசி கொன்று விட்டோம்காரணம் புகழ்ந்தோமே தவிர ஃபாலோ செய்யவில்லை.
படித்தவர் யார் என்ற கேள்விக்கு கோவை ஜி டி நாயுடு கூறுவார் : “இந்த நாட்டில் இனி படிக்க மாட்டோம் என்று யார் நிறுத்தி விட்டார்களோ, அவர்கள் தாம்“.  யார் யாரோ சொல்லியதை யெல்லாம் எழுதி கீழே APJ  அப்துல் கலாம் என்று எழுதிவிடுகிறார்கள். அப்படியல்லாமல் அவர் எழுதிய 23 நூல்களில் பெரும்பாலனவற்றை நான் படித்திருக்கிறேன். அவற்றுள் தி பெஸ்ட் என்று நான் சொல்வது “You are Unique” என்ற புத்தகம். கலாம் பற்றி மற்றவர்கள் திரும்பத் திரும்ப அலுப்பூட்டும் வகையில் சொல்வதிலிருந்து மாறி உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இந்த புத்தககம் பற்றித்தான்அதில் உலகை மாற்றிய ஆறு ஆளுமை மனிதர்களைப் பற்றி ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல எளிய முறையில் உற்சாகம் தரும் வகையில் எழுதிச் செல்கிறார்

1)   முதலாமவர் திம்பெர்னஸ் லீ. அவர் கண்டுபிடித்தார் என்று தெரிந்து கொள்ளாமலேயே நாம் பயன் படுத்தி வருவது இன்டர் நெட்அனைத்து நாடுகளில் இருந்து 6000 பேர் பணியாற்றும் ஓர் உலக நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர்ஒருமுறை பலபங்கங்கள் உள்ள டாக்குமெண்டை எல்லோருக்கும் உடனடியாக அனுப்ப வேண்டிய நெருக்கடி வந்ததுஎல்லோரிடமும் தான் கம்யூட்டர் உள்ளதே அவற்றை எல்லாம் ஏன் இணைக்கக் கூடாது என சிந்தித்து ஓரே இரவில் அவர் வடிவமைத்ததுதான் WWW என்ற இணையம். அது கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வை பேரனைக் கைபிடித்து அழைத்துச் சென்று இதோ பார்த்தாயா அதோ பார்த்தாயா என்ற குழந்தைகளுக்குரிய ஆர்வத்தோடு பேசும் தாத்தாவைப் போல அந்த புத்தகத்தில் விவரிக்கிறார்.
2)   அடுத்தவர், லேரி பேஜ். அவர் கண்டுபிடித்தது தான் கூகிள். என்ன ஒர் அற்புதம் அது. நம்மில் பல பேர் செல்போனையே இன்கமிங்  / அவுட் கோயிங் மட்டுமே பயன்படுத்துகிறோம். அது என்ன இன்கமிங்  / அவுட் கோயிங் என்று கேட்டால் கூட்டத்தில் பேச்சு பிடிக்கவில்லை என்றால் போனில்  இன்கமிங் அட்டன் செய்வது போல பாவனை செய்து கொண்டே அவுட் கோயிங் செய்து விடுவது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்புகள் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்L வந்துள்ளது. பில் கேட்ஸுக்கும் ஸ்டீவ் ஜாபுக்கும் என்ன வித்தியாசம்பில்கேட்ஸ் நினைத்தார் ஒவ்வொரு வீட்டின் டேபிள் மீதும் கம்யூட்டர் இருக்க வேண்டும். மாறாக ஒவ்வொரு பாக்கெட்டிலும் உலகத்தைக் கொண்டு சேர்க்க நினைத்தார் ஸ்டீவ் ஜாப். இன்று பாக்கெட்டுகளில் உலகையே உள்ளடக்கிய செல் போன்கள்.,
கூகிள் எப்படி வந்தது? லேரி பேஜ் PhD படிப்பில் சேர்ந்தார்அதற்குத் தேவையான புத்தகங்களை நூலகங்களில் அலைந்து  தேடுவதும் கஷ்டம், நூலகரிடமிருந்து வாங்குவதும் கஷ்டமாக இருந்ததுஉண்மையிலே மிகவும் கஷ்டமானது PhD. (அதை விட கஷ்டம் தமிழ்நாட்டில் + 2 படிப்பு ) பேராசியர்களான கெய்டுகளைத் தாண்டி அவர்களிடம் பணிவிடை செய்து அப்பப்பா. . . புத்தகங்களைத் தேட ஒரு தேடும் பொறி , சர்ச் இன்ஜின் இருந்தால் எவ்வளவு வசதி என்று நினைத்து லேரி பேஜ் கண்டுபிடித்ததுதான் கூகிள்.

அது சரி, கூகிள் என்பதன் பொருள் என்னசிலர் கூக்ளி என்பார்கள் அது கிரிக்கெட்டில்உண்மையில் கூகிள் என்பது ஒரு நம்பர், hundred to the power hundred (அதாவது 100100 என்பார்கள் கணிதத்தில்). எதையாவது தேடினால் அவ்வளவு விவரங்களை அள்ளிக் கொட்டுகிறதுஅதனால் தான் இப்போது ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பெரிய சவால் அல்லது கேள்வி Why I need a Teacher, when I am having Google கூகிள் இருக்கையிலே எதற்கு ஆசிரியர் என மாணவர்கள் கேட்கிறார்கள்.

அப்துல் கலாம் அவர்கள் நகைச் சுவையாக முடிக்கிறார் லேரி பேஜ் இன்னும் PhD முடிக்கவில்லை என்று.

3, மூன்றாமவர் தாமஸ் வில்லியம்ஸ் விக்கி பீடியாவைக் கண்டுபிடித்தவர். அவர் ஒரு ஸ்கூல் டிராப் அவுட்

உங்களுக்குத் தெரியும் மலாலாஅமைதிக்கான நோபல் பரிசு வென்ற சிறுமிஅவளிடம் பிபிசில் ஒரு பேட்டிநீ என்ன ஆக வேண்டும் என்ற கேள்விக்கு பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் நுழையும் அவள் கூறுகிறாள்மேத்தமேட்டீஷியன் ஆக வேண்டும்என்று. அந்த பெண் மலாலா  “தனக்கு பிடித்த அம்பது புத்தகங்களில் கலாமின் புத்தகமும் ஒன்று” என்றாள்.   ஆனால் நாம் நம் பிள்ளைகளிடம் கம்யூட்டரைத் தனியே பார்க்காதே, அவனிடம் செல் போன் கொடுக்காதே என்றுஏனென்றால் அதில் அவன் தவறான படங்களைத்தான் பார்ப்பான் என்ற நம்பிக்கையற்ற போக்கு.
இன்று டெக்னாலஜி வளர்ந்து விட்டது வாட்ஸ் அப் என்ற உக்ரைனைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு வரைதவறான இடத்தில் அதிகாரியின் கார் நின்றாலும் அது வாட்ஸ் அப்பில் வரும் அந்த அளவு அது ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளதுகலாம் அவர்கள் சர் சிவி ராமன் போல விஞ்ஞானி அல்லஅவர் ஒரு தொழில் நுட்ப அறிஞர்இதைத் திரும்பத் திரும்ப நாம் வலியுறுத்த வேண்டியுள்ளதுகலாம் அவர்கள் மூன்று தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்பட காரணமாக இருந்தார். 1, பெங்களூரில் உள்ள நானோ தொழில் நுட்ப நிறுவனம் அது இப்போது மனித மூளையை வடிவமைப்பதில் உலகிலேயே முதலாவதாக வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது அய்தராபாத்தில் உள்ள Institute of Population Genetics,  புதுச்சேரியில் கோளரங்கம், வேலூரில் பெரிய டெலிஸ்கோப், என பலவும் கலாம் அவர்களின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டவை,.

     2006 ல் சிதம்பரத்தில்  நான் அவரைச் சந்தித்தேன். ஏழைமக்களின் 350 குடும்பங்களே உள்ள கீரப்பாளையம் என்ற கிராமம் எங்கே உள்ளது அங்கே போகவேண்டும் என்றார். Z பிரிவு பாதுகாப்பில் உள்ள ஜனாதிபதி சாதாரணமாக நினைத்த இடத்திற்குப் போகமுடியுமா? பாதுகாவலர்கள் மறுத்தனர். பாதுகாவலர் என்றால் சாதாரண போலீஸ் என்று நினைத்து விடக் கூடாது. எல்லாம் பெரிய ஐஏஎஸ் அதிகாரிகள்கலாம் கோபப்பட்டு கேள்விப்பட்டதில்லை. பிறகு ஜனாதிபதியின் வேலைஎன்பது பிறநாட்டு ஜனாதிபதிகளை மரியாதை நிமித்தம் வரவேற்பது என அதிகாரிகள் விளக்க முற்பட கலாம் என்ன சொன்னார் தெரியுமா? ”இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருவரைத்தான் பிரிசிடென்ட் எனச் சொல்கிறது. ஒருவர் ஜனாதிபதி மற்றவர்கள் பஞ்சாயத்துப் பிரிசிடென்டுகள்”.  கலாம் சிதம்பரத்திற்கு அருகே உள்ள கீரப்பாளையம் கிராமத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
     அவர் ஏன் கீரப்பாளையம் செல்ல நினைத்தார்ஆனந்தி என்ற அந்த கிராமத்து சிறுமி கலாமுக்கு கடிதம் எழுதியிருந்தாள் அவளுடைய கிராமத்தில் எல்லா வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றுஇந்தியாவிற்கே தூய்மையை எடுத்துச் சொன்ன கிராமம் என்பதால் இந்திய குடியரசுத் தலைவரையே அங்கே வரவழைத்து விட்டது. கடைசிவரை ஒரு செல் வைத்திராத கலாம் அவர்கள் பல லட்சம் பேர்களுடன் கனெக்டடாக இருந்தார்.
     கீரப்பாளையம் சம்பவத்திற்கு முன் நாங்கள் அவர் மீது அவ்வளவாக ஈர்க்கப்படவில்லை. ஒரு வகையில் சொன்னால் அவர் மீது ஒரு கோபம் விமர்சனம் எல்லாம் இருந்தது. பீகார் சட்டமன்றத்தைக் கலைத்த ஜனநாயக விரோத செயல், பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்வினை ஆற்றாதது என. கீரப்பாளையம் சென்றார். அந்த கிராமத்து பிரிசிடென்ட் மற்றும் ஊர்மக்களை எப்போது என் வீட்டிற்கு வரப்போகிறீர்கள் எனக் கேட்டார்அவர்கள் தயங்கியபடியே ராமநாதபுரம் தானே ஒருநாள் வருவோம் என்றார்கள்அப்போதுதான் கலாமை தரிசித்தேன். அவர் கூறினார், “ராமநாதபுரம் இல்லை, இப்போது நான் உள்ள டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகைக்குஅவர்கள் ஏதோ பேச்சுக்குச் சொல்கிறார் எனப் பார்த்தால், அடுத்து வந்த குடியரசுதின விழாவில் விருந்தினராக அரசு செலவில் அழைத்து உபசரித்து தூய்மைக்காக விருது வழங்கினார். அது மட்டுமா, மாளிகையின் மௌகல் ரோஜாத் தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தார்இதனால் அவர் மக்களின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார்அவர் மறைந்த போது லட்சக்கணக்கில் காவலர்களுக்கு எந்த தொந்தரவும் தராமல் அஞ்சலி செலுத்தினர்எனது பள்ளியின் ஒரு நான்காம் வகுப்பு மாணவன் கையில் மெழுகுவர்த்தி உருகி கையில் வழிவது தெரியாமல் தேம்பித் தேம்பி அழுது அஞ்சலி செலுத்தினான் என்றால், இன்று அரசு உத்திரவு ஏதுமின்றி ஆங்காங்கே அவருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுகின்றனர்.
     இறுதியாக அவர் எழுதிய ஆங்கிலக் கவிதை மரத்தோடு ஆன்மா பேசுவதாக அமைந்த அற்புதமான கவிதை ஒன்றை இந்த விழாவிற்காக மொழியாக்கம் செய்து வந்துள்ளேன்அதனைப்படித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்”  கலாம் அவர்கள் ஏவிய ஏவுகணைகள் போல மிகத் துள்ளியமான நேரத்தில் உரையை நிறைவு செய்தார்.
     சிறப்புச் சொற்பொழிவாளருக்கு வெளிப்புறக்கிளைத் தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் சால்வை அணிவித்தார்மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் கீதா அவர்களின் தொகுப்புரையாய் அமைந்த நன்றி உரையுடன் படத்திறப்பு விழா மற்றும் டாக்டர் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா இனிதே நிறைவேறியது.
     முதலில் பழச்சாறு பிறகு மோர் என வழங்கிய தோழர் குணசேகரன் அவர்கள் பிறந்தநாள் விழா என்பதாலோ என்னவோ அனைவருக்கும் இனிப்பும் வழங்கினார்.
     கலாம் அவர்களின் திரு உருவப்படத்தினை விழுப்புரம் தோழர் S.செல்வம் TM அவர்கள் தனது பரிசாக அளித்தார். நமது நன்றிகள்.
     கலாம் அவர்களின் பொன்மொழி போல நம் அனைவர் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற விழா, மாவட்டச் சங்கத்திற்கு மகுடம் சூட்டிய விழா எனில் மிகையில்லை!










  
  

2 comments: