JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில் மனிதவள
இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நமது மாநில செயலர் தோழர் பட்டாபி ஊழியர் தரப்பில் கலந்து கொண்டார்.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
1. மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க
வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள்
விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.
2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA தோழர்களுக்கு
வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.
3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில
குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத் தாரை
வார்க்கப்படும்.
4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு அனுப்பப்படும்.
5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது பற்றி
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
6. ஊழியர்களின் வாடகை இல்லா
குடியிருப்புத்தொலைபேசியில்
இரவுநேர இலவசங்களை அளிப்பது
பற்றி பரிசீலிக்கப்படும்.
7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி ஊழியர் தரப்பு
இரண்டு வாரங்களுக்குள்
தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.
8. DELOITTE குழு அமுலாக்கத்தில் மாவட்டங்கள்
இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம்
மற்றும் நிர்வாகப் பொறுப்புக்களும், ஊழியர்
மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.
9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக
மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
10.இலாக்காத் தேர்வுகள் அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.
11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி
பரிசீலிக்கப்படும்.
12.CORPORATE அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.
13. தவறுதலாக வழங்கப்பட்ட பட்டுவாடாவை
மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற
உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே
வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால்
தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.
16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும் ஏனைய
படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள்
அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.
18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு
அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி
பரிசீலிக்கப்படும்.
No comments:
Post a Comment