.

Friday, October 2, 2015

புதுவை மாவட்ட மாநாடு

NFTE பேரிக்கத்தின் வைரவிழா கொண்டாடப்பட்ட அதே அரங்கில் புதுவை மாவட்ட மாநாடு 29/09/15-ல் வெகு சிறப்பாக நடந்தது, கடலூர் மாவட்டத்திலிருந்து 60கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களின் உரை இன்று நம்  BSNL முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்த ஆழமிக்க தொடக்க உரையாக அமைந்து மாநாட்டிற்கு நல்ல துவக்கத்தைத் தந்தது.
     மாநாட்டில் மாவட்ட பொது மேலாளர் திருமதி லீலாசங்கரி ITS கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும், மேலும், துணைப் பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் அனைத்துத் தோழமைச் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
     நமது சங்கத் தலைவர்கள் சம்மேளனச்செயலர்கள் தோழர் SSG, தோழர் G.ஜெயராமன், மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் K.சேது, TMTCLU மாநிலப் பொதுச்செயலர் தோழர் R.செல்வம், மாநிலத்துணைசெயலர்கள் தோழர் சென்னக்கேசவன், தோழர் K.நடராஜன், மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன்,  கடலூர் மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர்  கலந்து கொண்டனர்,
     சிறப்பான ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் தோழர் P.காமராஜ்  மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.
     வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வில் ஒரு மனதான தீர்வுக்கு முயற்சி செய்யப்பட்ட போதும் அம்முயற்சி வெற்றி பெறாத காரணத்தால் ஜனநாயக முறையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. புதுவையின் மூத்த தோழர் லோகநாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்மாலையில் துவங்கிய வாக்கெடுப்பு மறுநாள் மதியம் வரை மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  பதிவு செய்த சார்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வாக்களித்தனர்.
     தேர்தல் நடைமுறைகள் துவங்குவது பற்றி நெறிமுறைகளை வகுப்பது பற்றி மாநிலச் செயலர் பேச முற்பட்ட போது மாநிலப் பொருளாளர் தோழர் அசோகராஜன் மைக்கைப் பறிக்க முற்பட்ட செயல் பொருத்தமானது அல்ல. வருத்தத்திற்குரிய அவரது செயல்பாடு அது போன்ற பழைய சம்பவங்களை நினைவு படுத்துவதாகவே இருந்ததுபொறுப்பான சம்மேளனச் செயலரும் அமைதி காத்தது  ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்துவதாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.
     இவற்றிற்கெல்லாம் பதில் தருவது போல புதுவைத் தோழர்களும் தோழியர்களும் வாக்குகளில் தமது முடிவைத் தெளிவாகத் தெரிவித்தனர்,
     மாவட்டச் செயலராகப் போட்டியிட்ட தோழர் செல்வரங்கம் பட்டியலில் அதிகபட்சமாக 85 வாக்குகளையும், தோழர் K.அசோகராஜன் பட்டியலில் 38 வாக்குகளையும் புதுவைத் தோழர்களும் தோழியர்களும் வழங்கினர்.
     தோழர் P.காமராஜ்  மீதான விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் புனையப்பட்டது என்பதைப் புதுவைத் தோழர்களின் முடிவு தோலுரித்துக் காட்டுகிறதுஇனியாகிலும் மதுரை தொடங்கி புதுவை ஈறான தவறான தனிப்பாதையை விட்டு விலகி தோழர்கள் பொது நீரோட்டத்திற்கு வர வேண்டும் என்பதே பெரும்பாலான தோழர்களின் விழைவும் விருப்பமும் ஆகும், அது ஒன்றே NFTE- வலுப்படுத்தும்தவறுகள் குற்றங்கள் ஆகாதுதான், ஆனால் தவறுகள் தொடரும் போது அவை வரலாற்றில் குற்றங்களாகவே பதிவுபெறும். வரலாறு யாருக்காகவும் காத்திருப்பதில்லை – NFTE  பேரிக்கத்திற்கு அடுத்த அங்கீகாரத் தேர்தல் என்ற வரலாற்று கடமை மட்டுமே காத்திருக்கிறது,
இணைந்து சந்திப்போம்  வெற்றிகளைக் குவிப்போம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் 
மாவட்டத்தலைவர்  தோழர் M.தண்டபாணி 
மாவட்டச்செயலர் தோழர் .M.செல்வரங்கன்
மாவட்டப்பொருளர் : தோழர் V.தேவதாஸ் 
 கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!   NFTE  ஜிந்தாபாத் !





No comments:

Post a Comment