”சாதித்தது எங்கள் மாவட்டம்
சாதித்தது எங்கள் விவசாயிகள்
துணையிருந்தது எங்கள் N L C
விதையாய் ஊற்றாய் உந்து சக்தியாய்
இருந்தது எங்கள் கலெக்டர் பேடி” என
துள்ளிக்குதித்துக் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. சப்தமில்லாமல் சாதிக்கப்பட்டிருக்கிறது, கடலூர் கம்மியம்பேட்டை புதுப்பாலம் திறக்கப்பட்டது போல. இதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? பாராட்ட வேண்டாமா? நம்முடைய பொதுவுடைமைத் தலைவர்கள் கூறுவார்களே, தமிழில்தான் நீர் நிலைகளுக்கு எவ்வளவு பெயர்கள்,,, குளம் குட்டை ஊருணி ஏரி வாய்க்கால் வடிகால் ஓடை என,,,எனவே அரசாங்கங்களே நீர் நிலைகளைப் பராமரியுங்கள் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளுங்கள் ‘மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள் ’ என.
அப்படி ஒரு நிகழ்வு-- காணாமல் போன கேணியைக் கண்டுப்பிடிக்கும் நகைச்சுவையாய் அல்லாமல், தூர்ந்து போன ஏரியை—பெயர் தவிர வேறு தடையங்களோ தஸ்தாவேஜுகளோ இல்லாத ஏரியை – கண்டறிந்து கட்டமைத்துள்ளார்கள். உலகில் வேறு எங்கும் இது போலச் சாதித்ததில்லையாம் எனில் இது சாதனைதானே!
இனி படியுங்கள் இந்து தமிழ் இன்றைய நாளிதழின் இந்தக் கட்டுரையை:
புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி - தி இந்து நாளிதழ் கட்டுரை
No comments:
Post a Comment