தமிழ் மாநில
மாவட்டச் செயலர்கள் கலந்தாய்வுக் கூட்டம், கடலூர்
மாநிலச்
சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் மாநில மாவட்டச் செயலர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தை கடலூர் மாவட்டச் சங்கம் ஏற்று நடத்தியது.
கடலூர்
மெயின் தொலைபேசியக கான்பரஸ் ஹாலில் 27-11-15 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர் M. லட்சம் தலைமையில் கூட்டம் துவங்கியது. மாநில பொறுப்புச் செயலர் தோழர் P.
சென்னகேசவன் தவிர்க்க முடியாது வரமுடியாத சூழலில் சென்னை தோழர்
G.S. முரளிதரன் மாநில
உதவிச் செயலாளர் பொறுப்பேற்று நடத்தினார். தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டது இந்த அமர்வின் தனிச்சிறப்பு.
தர்மபுரி
மாவட்டச் செயலர் தோழர் மணி அவர்கள் சமீபத்திய புயல் மழையில் -- கடலூர் உள்ளிட்டு-- மாநிலத்தில் அகால மரண மடைந்தவர்களுக்கு அஞ்சலி உரையாற்ற அவை அஞ்சலி செலுத்தியது.
நமது
மாவட்டச் செயலர் இரா,ஸ்ரீதர்
மாவட்டசங்க சிறப்பு நிகழ்வுகளைக் கூறி வந்திருந்தோரை வரவேற்றார்.
அவுரங்காபாத்
மத்திய செயற்குழு விவாதப் போக்குகளையும் முடிவுகளையும் மிகச் சிறப்பாக விளக்கி மத்திய சங்கச் சிறப்பு அழைப்பாளர் தோழர் P. காமராஜ் துவக்க உரையாற்றினார்.
மாநில
உதவிச் செயலாளர் தோழர் G.S. முரளிதரன் நிகழ்ச்சிநிரலை அறிமுகம் செய்து அமர்வின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார்.
வேலூர்
மாநில மாநாட்டு வரவேற்புக் குழு
அடுத்த
மாநில மாநாடு வேலூரில் நடைபெற உள்ளது.
வேலூர்
மாநில மாநாட்டு வரவேற்புக் குழுப் பொதுச் செயலாளர் தோழர் P. நெடுமாறன் வரவேற்புக்குழுவின் சார்பில் மாநில மாநாட்டிற்காக எடுக்கப்பட்டுவரும் தயாரிப்பு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் அமர்வின் முன் வைத்தார். மாநில மாநாடு
சிறக்க நிதி ஆதாரத்தைத் திரட்டித் தந்து அனைத்து மாவட்டச் செயலர்களும் ஒத்துழைக்க வேண்டும் என தோழமை வேண்டுகோள் விடுத்தார். வேலூர்
மாவட்டச் செயலர் தோழர் அல்லிராஜா, வரவேற்புக்குழுப் பொருளாளர் தோழர்
மதியழகன் மாநாடு பற்றிய கூடுதல் விவரங்கள் தந்து உரையாற்றும் போது எல்லோரும் மாநாடு சிறக்க ஒத்துழைப்பதுடன் அனைவரையும் வரவேற்க வேலூர் ஆவலோடு காத்திருப்பதாகக் கூறினார்கள்.
அனைத்து
மாவட்டச் செயலர்களும் பங்கேற்று உரையாற்றியது நாம் சந்திக்க உள்ள அங்கீகாரத் தேர்தலின் வெற்றிக்கு கட்டியம் கூறியது.
அமர்வில்
கலந்து கொள்ள கடலூர் வந்த பிறகு தூத்துக்குடி மாவட்டச் செயலர் இடையே வந்த துயரச் செய்தியால் திரும்ப நேரிட்டது.
மாநில
மாநாட்டு நிதி
கடலூர்
மாவட்டத்தின் சார்பில் மாநில மாநாட்டு பங்களிப்பான ரூபாய் ஒரு லட்சத்தை ஏற்கும் வகையில் முதல் தவணையாக ரூபாய் இருபதாயிரம் (ரூ20,000/=) வழங்கப்பட்டது. மாவட்டச் செயலர்களிடம் வரவேற்புக் குழு ரசீது புத்தகங்களை ஒப்படைத்தது.
வாழ்த்துரை
தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்வின் பொறுப்புக்களுக்கிடையேயும் அமர்வில் கலந்து கொண்டு, ஒற்றுமையை வலியுறுத்தி
மாநில மாநாட்டின் வெற்றிக்கு நல்ல துவக்கம் செய்து சம்மேளனச் செயலர் தோழர் G. ஜெயராமன் வாழ்த்தினார். அகில
இந்திய அமைப்புச் செயலர் தோழர் S.S.கோபாலகிருணஷ்ணன் உற்சாகமான உரையாற்றினார்.
மேலும், மாநில சங்க சிறப்பு அழைப்பாளரும் நமது வழிகாட்டியுமான மூத்த தோழர் K. சேது, முன்னாள் மாநிலச்
செயலர் தோழர் S.தமிழ்மணி, TMTCLU மாநிலப் பொதுச்செயலர் தோழர்
R. செல்வம் முதலிய தோழர்கள் கருத்துரை வழங்கினர்.
மாநிலப்
பொருளாளர் தோழர் K. அசோகராஜன் உள்ளிட்ட மாநில சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
மாவட்டத்
தோழர்களுக்கு நன்றி
நமது
மாவட்டத் தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளையும் உடல் உழைப்பையும் நல்கினர். மாவட்ட உதவிச்செயலர்
தோழர் D.
குழந்தைநாதன்
அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்க, TMTCLU மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் V.முத்துவேல் தேநீர் மற்றும் வடை வழங்கினார். GM அலுவலகக் கிளைச் செயலர் தோழர் S இராஜேந்திரன் மதியம் தேநீரும் சுண்டலும் வழங்க, பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு RGB உறுப்பினர் தோழர் P.குமார் பொறுப்பேற்றார். இவர்களோடு
சிறப்பாக பணியாற்றிய தோழர்கள் A.C.முகுந்தன், KV.பாலசந்தர், P.ஜெயராஜ், R.ஸ்ரீநாத், V.இளங்கோவன், R.பன்னீர்செல்வம், S. மணி, P.லட்சுமணன், R.நந்தகுமார், S.குருபிரசாத், M.S.குமார் ஆகிய தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
நிர்வாகத்திற்கு
நன்றி
கான்பரஸ்
ஹாலில் கூட்டம் நடத்த அனுமதி தந்த மாவட்ட பொது மேலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி.
ஹாலுக்கு
கூட்டம் நடத்திட நாள் வாடகை தர வேண்டும் என்ற நிலைபாட்டை மாவட்ட சங்கம் ஏற்றுக் கொள்கிறது. அதேபோது, அந்த
வாடகை பொறுப்பேற்பது / பங்கேற்பது என்ற அளவில் அல்லாது வருவாய் ஈட்டுவது என்ற வகையில் இதனை நிர்வாகம் அணுகாது என நம்புகிறோம்.
கான்பரஸ்
ஹால் மற்றும் விருந்தினர் ஆய்வு மாளிகை இடங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்பட்டு வழங்கப்பட்டதற்கு கடலூர் தொலைபேசி உட்புற/ வெளிப்புற மாவட்டப்
பொறியாளருக்கு நமது நன்றி. (ஏனெனில் இது பற்றி முன்பு நாம் சில குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்தோம். இப்போது அவை சரிசெய்யப் பட்டுள்ளன.)
மதிய
உணவு—சம்மேளனச் செயலருக்கு
நன்றி
மதிய
உணவை சம்மேளனச் செயலர் தோழர் G. ஜெயராமன் அவர்கள் தமது மகள் திருமண வரவேற்பு மண்டபத்திலேயே சிறப்பாகச் செய்திருந்தார். அவருக்கு
மாவட்ட சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிறைவுரை
மாலையில்
நிறைவடைந்த மாவட்டச் செயலர்கள் அமர்வில் தோழர் பட்டாபி நிறைவுரையாற்றினார். பிரச்சனைத்
தீர்வுகளின் இன்றைய நிலை, நாம் எதிர்
நோக்கியுள்ள சவால்களை விளக்கிக் கூறி அங்கீகாரத் தேர்தலில் நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் கடமைளை மனதில் பதியச் செய்தார்.
மாநில
மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறி மாநாடு வெற்றி பெற அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.
கடலூர்
அமர்வு நம்மை புதிய தடத்தில் நடை போட நம்பிக்கை வெளிச்சம் தந்த சிறப்பான உள்ளரங்க நிகழ்வாய் அமைந்தது என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி
வெற்றியை
நோக்கி உறுதியோடு உழைப்போம்!
முன்னோக்கிச்
செயலாற்றுவோம்!
தோழமை வாழ்த்துக்களுடன்,
இரா, ஸ்ரீதர்
மாவட்டச் செயலர்
27-11-2015 அன்று கடலூரில் நடைபெற்ற தமிழ்மாநில சங்க மாவட்ட செயலர்கள் கலந்தாய்வு கூட்டத்தின் காட்சிகள்,,,,,,
Good Report
ReplyDelete