.

Thursday, November 12, 2015

அவுரங்காபாத் மத்திய செயற்குழு
தீர்மானங்கள்...

போனஸ் 
போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்.. மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி - GPF
வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 
12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL நிர்வாகம்  உடனடியாக 78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும்.

நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.
BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012 வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால் ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 
BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 
ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட  வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான  இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 
செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும் தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.






No comments:

Post a Comment