செயலகக்கூட்டம் – 26-01-2016
இன்று மதியம் 3-00 மணியளவில் மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம்
தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலவலகத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்
மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள், நிர்வாகிகள்,
மற்றும் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாநில,மாவட்ட நிகழ்வுகள், மற்றும்
பிரச்சனைகள் ஆகியவற்றை விளக்கினார்.
கூட்டத்தில்,
- வருகின்ற பிப்ரவரி 6-ல் வேலூரில் நடைபெறும் மாநில செயற்குழுவில் திரளாக கலந்துகொள்வது.
- வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான நமது பங்கினை மாநில செயற்குழுவிற்கு முன்னதாக பிப்ரவரி 3–க்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
- மாநில மாநாட்டிற்கான தோழர்களின் பங்கான ரூபாய் 300-யும் விரைந்து வசூலித்து உடனடியாக ஒப்படைப்பது எனவும் இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment