.

Saturday, January 30, 2016

JTO இலாக்காத்தேர்வு

நமது தோழர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த JTO 50 சத    இலாக்காத் தேர்வு நடத்திட  BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தேர்வு  புதிய JTO ஆளெடுப்பு விதி 2014ன்படி நடத்தப்படும்.
2013-14, 2014-15, மற்றும் 2015-16ம் ஆண்டுகளுக்கான JTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு செய்யவும்  மாநில நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 BSNL நிர்வாகம் 28/01/2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி
மாநிலங்கள் தேர்வு அறிவிப்பு செய்யும் நாள்               - 15/02/2016
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள்                - 22/02/2016
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி  நாள்      - 22/03/2016
தேர்வு நடைபெறும் நாள்                                         - 08/05/2016
தேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ON LINE EXAMINATION)
தேர்வு EXAMINATION AGENCY வாயிலாக  நடத்தப்படும்.
தற்போது பயிற்சியில் இருக்கும் OFFICIATING JTO தோழர்களை நிரந்தரம் செய்தது போக மீதமுள்ள  காலியிடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.

இலாக்காத்தேர்வுகள்  இணையதளத்தின் வழியாக Agency  மூலமாக நடத்தப்படும் என்பது நெருடலாக உள்ளது. தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி JTO இலாக்காத்தேர்வு அறிவிப்பு செய்ய வைத்த நமது மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக.

No comments:

Post a Comment