.

Tuesday, February 16, 2016

நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட மடல்களை
பல்வேறு பிரச்சினைகளின் தீர்விற்காக
BSNL நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது.

JTO இலாக்காத்தேர்வு

3 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறவிருந்த JTO  இலாக்காத்தேர்வு நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இளம் TTA தோழர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மேலும் JTO பதவிகள் நிரப்பப்படாத நிலையில் BSNL சேவை வெகுவாக பாதிக்கப்படும் நிலையும் உருவாகும். எனவே நிர்வாகம் இப்பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு தேர்வு நடப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது..

JAO இலாக்காத்தேர்வு

ஏறத்தாழ 3 ஆண்டுகளாக JAO இலாக்காத்தேர்வு நடைபெறாததால் தற்போது நடத்தப்படவிருக்கும் JAO இலாக்காத்தேர்விற்கு 55 வயதுடைய தோழர்களையும் தேர்வெழுத  சிறப்பு அனுமதி வழங்குமாறு BSNL நிர்வாகத்தை மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

GPF வைப்பு நிதி ஒதுக்கீடு

GPF பட்டுவாடா வழங்குவதற்கான  நிதி ஒதுக்கீட்டை
மாநிலங்களுக்கு உடனடியாக மேற்கொள்ளுமாறு
BSNL நிர்வாகத்தை மீண்டும் நமது சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment