செயலகக் கூட்டம்-11-03-2016
நமது மாவட்ட சங்கத்தின் செயலகக்
கூட்டம் 11-03-2016 வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம் தலைமையில் சங்க அலுவலகத்தில்
நடைபெற்றது. மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை
செயலர்கள், முன்னணித் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,
- 15-03-2016 சேலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திரளாக கலந்துகொள்வது எனவும்,
- 23-3-2016 விழுப்புரத்தில் தோழர்.இஸ்லாம் அவர்கள் பங்கேற்கும் தேர்தல் சிறப்புக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும்,
- தேர்தலுக்கான நன்கொடையை சேலம் கூட்டத்திற்குள்ளும், மாநில மாநாடுக்கான நன்கொடையை விரைவில் அளித்திட கிளை செயலர்களை இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
- பண்ருட்டி கிளை அமைப்புநிலை பிரச்சனையில் மாநில சங்க வழிகாட்டுதலை மாவட்ட சங்கம் முழுமையாக ஏற்றுகொள்ளும் என செயலகக்கூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துகிறது.
- மேலும், வருகின்ற ஏழாவது சரிபார்ப்பு தேர்தலில் நம்முடன் இணைந்துள்ள தோழர் கோஹ்லி தலைமையிலான NFTBE சங்கத்தினையும், தோழர் சுப்புராமன் தலைமையில் நமது சங்கத்துடன் கூட்டணிக்கு வந்துள்ள TEPU சங்கத்தையும் மாவட்ட சங்கம் வரவேற்கிறது. மேலும் இதற்கு உறுதுணையாக இருந்து முயற்சித்து வெற்றிகரமாக்கிய தோழர் ஆர்.கே அவர்களை கடலூர் மாவட்ட செயலகக்கூட்டத்தின் மூலம் வாழ்த்துகிறது.
இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடலூர் – தோழர் இரா.ஸ்ரீதர்
சிதம்பரம் – தோழர் V.லோகநாதன்
விருத்தாசலம் - தோழர் N.அன்பழகன்
நெய்வேலி - தோழர் D.மோகன்ராஜ்
கள்ளக்குறிச்சி - தோழர் R.செல்வம்
விழுப்புரம் - தோழர் P.சுந்தரமூர்த்தி
திண்டிவனம் - தோழர் இரா.ஸ்ரீதர்
No comments:
Post a Comment