.

Sunday, March 13, 2016

34 வது தேசியக்குழுக் கூட்டம்
குறிப்பு -

            இயக்குநர் (HR) திருமதி சுஜாதா ராய் தலைமையில் நடைபெற்றது, திரு, ஷமீம் அக்தர்  PGM (SR) வரவேற்புரையாற்றினார். BSNL கம்பெனியின் தற்போதைய நிலைமை, புன்னகையுடன் சேவை போன்ற தொழிற்சங்கங்களின் முன்முயற்சி முதலியவற்றைத் தமது தலைமை உரையில் குறிப்பிட்ட தலைவர் ஊழியர்களின் குறுகிய கால எதிர்பாப்புகள் மற்றும் சம்பள மாற்றம் போன்ற நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கிடையே சமச்சீர் பேணப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்இத்தகைய யூகமான புரிதல்களுக்கு மாறாக உண்மை நிலைகளின் அடிப்படையில் தீர்வுகள் அமைவதையே நாம் விரும்புவதை உணர்ந்த தலைவர், தொழிற்சங்கங்களுடன் மனந்திறந்த விவாதங்களுக்குத் தயார் என்றார்.

     ஊழியர் தரப்புத் தலைவர் தோழர் இஸ்லாம் நிர்வாகத்தின் உடனடி கவனத்தில் கொள்ள வேண்டிய அனைத்துப் பிரச்சனைகளையும் குறிப்பிட்டு விரைவான தீர்வே ஊழியர்களை மகிழ்வித்து அவர்களை மேலும் உழைக்க உற்சாகப் படுத்தும் எனக் குறிப்பிட்டார். அவர் தமது அறிமுக உரையில் கூறியதாவது-:- “தளவாடப் பொருட்கள் தடையின்றி வழங்கப் பட்டால் முழுமையாக உழைப்பைத் தர ஊழியர்கள் தயாராகவே உள்ளனர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் முதலிய பகுதிகளில் கூட டிராப் ஒயர் முதலிய பொருட்களின் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.

     உதாரணத்திற்கு சில பிரச்சனைகளைக் குறிப்பிட விரும்புகிறேன், அட்ஹாக் போனஸ், 78.2 அடிப்படையில் வீட்டு வாடகைப் படி, நேரடி நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள், கேடர்களின் பெயர் மாற்றம், விடுபட்ட கேடர்களுக்கு கூடுதல் ஆண்டுயர்வுத் தொகை, ஆண்டு தோறும் இலாக்கா பதவி உயர்வுத் தேர்வு நடத்துதல், முன்னாள் இராணுவ வீரருக்கு  JTOபதவி, TM பயிற்சி பெற்ற RM களுக்கு விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு, அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் ஊழியர் பற்றாக்குறை , தற்காலிகமாக LM ஆனவர்களின் சம்பளத்தில் பிடித்தம் மற்றும் பென்ஷன் குறையும் நிலை, NEPP யால் சம்பளவிகிதத்தின் உச்சத்தை அடைந்து ஊதிய தேக்க நிலை அடைந்தவர்களுக்காவது நிவாரணம் தருதல், மற்றும் NEPP யால் ஏற்பட்ட இதர பாதிப்புகளைக் களைதல்முதலியவை பற்றி அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

     கூட்டத் தலைவர் இந்த எல்லா பிரச்சனைகளின் மீது நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு பதிலுரைத்தார்.

பிரச்சனைகளின் இன்றைய நிலை குறித்த சிறு குறிப்பு

1.   78.2 சதவீதத்தில் ஏனைய சலுகைகள் :- நிர்வாகம் ஒரு துவக்கமாக சில சிறிய சலுகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட, ஊழியர் தரப்பு அனைத்து சலுகைகளுக்கும் ( வீட்டு வாடகைப் படி, திறன் மேம்பாடு, வெளிப்புறச் சிகிச்சைக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்கும் சலுகை) பரிசீலிக்க வற்புறத்தியதுநிர்வாகம் பரிசீலிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
2.    GPF  :- நிர்வாகம், பண வரவில் (CASH FLOW) ஏற்படும் சிரமங்களையும் 10% வட்டிக்கு வங்கிக் கடன் பெற்று GPF வழங்குகிறோம் என்றது. GPF பணத்தை DOT யிடம் ஒப்படைப்பதை நாம் கடுமையாக எதிர்த்தோம்நிர்வாகம், DOT பிடியிலிருந்து GPF விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகக் கூறியது.

3.    கேபிளைச் சிதைத்தல் / காயப்படுத்துதல் :-  நமது கேபிளைக் காயப்படுத்துபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் கேபிள் பாதுகாப்பு நடைமுறையை நிர்வாகம் விளக்கியதுஆனால் நாம் இதன் மீது காவல்துறையில் FIR பதிவது மற்றும் தொழில் நுட்ப ரீதியாக கேபிளைப் பாதுகாக்கும் நடைமுறைகளை மேம்படுத்த வற்புறுத்தியுள்ளோம்.

4.   4 G சந்தை :- நிர்வாகம், சண்டிகாரில் 2,500 மெகாஹர்ட்ஸ் துவக்கியுள்ளதாகத் தெரிவித்ததுஆனால் பிரதானமான முக்கிய மாநிலங்களாகிய ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா முதலியவற்றிலேயே 2500 mhz அலைக்கற்றை இல்லை என்பதைக் கூறி இம் மாநிலங்களில் 4 G சந்தையைப் பிடிக்க வேறு வழிவகைக் காணப்பட வேண்டும் என வற்புறுத்தினோம். 4 G சந்தையைப் பிடிப்பது குறித்து நிர்வாகம் கவனத்தில் கொண்டு ஆவன செய்யும் என உறுதியளிக்கப்பட்டது.


5.   78 .2 சதவீதத்தில் வாடகைப்படி :- இது நிர்வாகத்தின் ஆழ்ந்த பரிசீலனையில் உள்ளது.

6.   திறன் மேம்பாடு :- அரசின் முன்முயற்சி வழிகாட்டுதலில் 15,000 ஊழியர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சிக்காக ஆந்திரா, தமிழ்நாடு முதலிய ஏழு வட்டங்களில் கண்டறியப்பட்டுளனர் எனவும் விரைவில் அதற்காக வழிகாட்டுதல் வெளியிடப்படும் எனவும் நிர்வாகம் கூறியது.


7.   விதி எண் 8 ன் கீழ் மாற்றல்கள் :- வழிகாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன

8.   கேடர் பெயர் மாற்றம்:- TTA / Sr.TOA / TM / RM  பெயர் மாற்றத்திற்கான போர்டின் அனுமதி பெறப்பட்ட பிறகு சிவில் / எலெக்டிரிகல் / டெலிகாம் பேக்டரி பகுதிகளில் கேடர் பெயர் மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.


9.   தொழிற் சங்கங்களுக்கு வசதிகள் :- தொலைபேசி மற்றும் ஏனைய கட்டமைப்பு வசதிகள் குறித்து வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்.

10. JTO ஆளெடுப்பு விதிகள் :- அனைத்து ஊழியர்களையும் JTO LICE தேர்வு எழுத    அனுமதிக்க வேண்டும் என ஊழியர் தரப்பு வலியுறுத்தியது. நிர்வாகம் விதிகளின் பொருத்தப்பாடின்மையை விடாப்பிடியாய் எடுத்துக்கூறி மறுத்தது. இறுதியில் JAO கேடருக்குள்ள விதி போன்ற கட்டுப்பாடுகளைப் பரிசீலிக்க இசைந்தது.


11. உயர்நிலை டைப் குடியிருப்பு :- இந்தப் பிரச்சனையை SR பிரிவு பரிசீலிக்கும்.

12. NEPP உயர்நிலை ஸ்கேல் பதவியிலிருந்து (கீழ்நிலைப் பதவி அடிப்படையில் ) பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் NEPP ஊதியப் பலன் வழங்கக் கோரினோம். ( இது NEPP திட்டத்தால் விளைந்த ஒரு முரண்பாடு ) ஆனால் நிர்வாகம் கோரிக்கையை ஏற்புடையதல்ல என மறுத்து விட்டது


13. NEPP மேலும் மேம்படுத்துவது :- இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்த வழி இல்லை என்றது நிர்வாகம்ஆனால் SC/ST தோழர்களுக்குத் தகுதிச் சேவை ஆண்டுகளை குறைத்து சலுகை நீட்டித்தல், நேரடி நியமனம் பெற்றவர்களுக்கு மட்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு என்ற பாரபட்சமான முரண்பாட்டை நீக்கி 4 ஆண்டு / 7 ஆண்டு ஆக்குதல் முதலியவற்றை நாம் கடுமையாக வற்புறுத்தினோம்நமது வற்புறுத்தலுக்குப் பிறகு இப்பிரச்சனை குறித்து ஊழியர் தரப்பு தனியான ஓரு குறிப்பு தாக்கல் செய்யுமாறு நிர்வாகம் கோரியுள்ளது

14. IDA இணைப்பு மற்றும் ஊதிய மாற்றம்   :-  DOPE உத்தரவுகளைக் காட்டி ஊதிய மாற்றத்தைத் துவக்க முடியும் என நாம் வாதிட்டோம். ஆனால் நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.  DPE லிருந்து ஊதிய மாற்றக் குழு அறிவிக்கை பெறப்பட வேண்டும் என நிர்வாகம் கருதுகிறது.


No comments:

Post a Comment