.

Thursday, March 17, 2016

வெற்றிக் கனி நமதே !
மாங்கனி சேலம் கூட்டத்தின் செய்தி இதே !
NFTE கூட்டணி சங்கங்களின் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மாநிலத் தலைவர் தோழர் லட்சம் அவர்களின் சீரிய தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. கூட்டணி தோழமைச் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பார் சிறுத்ததோ படை பெருத்ததோ என ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்சிய செயல் மறவர்கள் கூடினர்தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டச் செயலர்களும் களப்பணியாற்ற ஆர்வமுடன் குழுமினர். இதோ படைக்கலன்கள் என தலைவர்கள் மணிமணியாய் செய்திகளை அள்ளித் தந்தனர். அருவியாய் பொங்கியதன் தெறிப்புகளின் தொகுப்பு வருமாறு
தோழர்கள் சென்னகேசவன் மற்றும் C.பாலகுமார் வரவேற்றனர். தலைவர் குடந்தை ஆர். ஜெயபால் எழுச்சியுரையாய் துவக்கவுரையாற்ற, மாநிலத் துணைத் தலைவர் தோழியர்  T.பரிமளம் அஞ்சலி செலுத்த தலைவர்கள் எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன், ஜி. ஜெயராமன். காமராஜ், கே. சேது உரையாற்றினர்தோழர் . முத்தியாலு ஓய்வூதியர் நலச் சங்க அனுபவத்தைஒன்றாய் ஒரே சங்கமாய்அதுவும் கே.ஜி. போஸ் அணித் தோழர்கள் தலைமையில் செயல்பட்டு வந்த சங்கத்தைஉடைத்து ஓய்வூதியர்களிடையேயும் தனிக் கடை துவக்கிய BSNLEU பாதையின் சீர்கேட்டை விளக்கிக் கூறினார்.


தேர்தல் சிறப்பிதழ் வெளியீடு
     NFTE கடந்த காலங்களில் சாதித்தவை, BSNLEU சங்கத்தின் தனியாட்சியில் தேங்கிய பிரச்சனைகள் நாமும் அங்கீகாரம் பெற்றபின் நமது முயற்சியால் தீர்வடைந்த பிரச்சனைகள் மேலும் 2017 ஊதிய மாற்றம் உட்பட எதிர்காலத்தில் நமது திட்டங்களின் முன்மொழிவு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் தொகுப்பு அடங்கிய சிறப்பிதழைத் தோழர் ஆர். கே. வெளியிட சேலத்தின் மூத்த தோழர் எம். சுப்பிரமணி உட்பட 8 தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
தோழமை கூட்டணித் தலைவர்கள்
     TEPU சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் V. சுப்புராமன், SEWA BSNL சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் P. N. பெருமாள் NFTE சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்  C.C. சிங் சிறப்புரையாற்றினர். அவர் தமது உரையில் எட்டு ஆண்டுகளாக தேங்கிய பிரச்சனைகளில் கடந்த மூன்றாண்டுகளில் நாம் எடுத்துத் தீர்த்த பிரச்சனைகள் மற்றும் நாம் முதன்மைச் சங்கமாக வந்தால் இன்னும் சிறப்பாக செயல்படுத்தக் கூடிய பிரச்சனைகளைத் தொகுத்துக் கூறினார். (தோழர்  C.C. சிங் உரையை தோழர் பட்டாபி சிறப்பாக மொழிபெயர்த்து வழங்கினார்)
     மேலும் TEPU சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கே. கிருஷ்ணன், மற்றும் தோழர் கண்ணதாசன், PEWA சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் N. பாலகிருஷ்ணன், SEWA BSNL சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் முத்துகிருஷ்ணன், NFTE தமிழ் மாநில சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர். பட்டாபி செயல் திட்டங்கள் வியூகங்களை விரித்துரைத்தனர்கூட்டணி அமைவதில் பெரும் பங்காற்றிய தோழர் ஆர். கே. அவர்களின் கடும் முயற்சி வெகுவாகப் பாராட்டப்பட்டது.
     TEPU சங்கத் தலைவர்கள் பேசும் போது கடந்த 6 தேர்தல்களாக சங்கத்துடன் சேர்ந்து செயல் பட்டதில் BSNLEU சங்கத்தின் இயலாமையை நேரடியாக உணர்ந்ததாகக் கூறினர்.
கருத்தரங்கமும் நிறைவுரையும்
     வருவாய் பெருக்க கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்துரையாளர்கள் BSNL நிறுவனத்தை முதன்மைப்படுத்த அதன் வருவாயை உயர்த்த ஊழியர்கள் அனைத்து கடும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இறுதியாக தோழர் ஆர். கே. நிறைவுரையாற்றினார்பெருந்திரளாக உற்சாகப் பெருக்காக இங்கே கூடியுள்ள கூட்டம் 51 சதத்திற்கும் மேலாக நமது கூட்டணி வெல்லப் போவதை கட்டியம் கூறுசிறதுஎன்றாலும் நாம் கவனமாய் இருப்பதும் மேலும் மேலும் களப்பணியாற்றிடவும் வேண்டும் என்ற நமது கடமையை நெஞ்சில் பதிய வைத்தார்.
     மாநிலப் பொருளாளர் தோழர் கே. அசோகராஜன் நன்றி கூறினார்.
     கடலூர் மாவட்டத்தின் சார்பாக 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டோம்.
     மாநில துணைத் தலைவர் சேலம் தோழர் வெங்கட்டராமன் வழிகாட்டலில் சேலம் மாவட்டச் செயலர் தோழர் C. பாலகுமார் தலைமையில் பம்பரமாய் சுழன்று பணியாற்றிய சேலம் தோழர்களை அவர்களது சிறப்பான ஏற்பாடுகளுக்காக சிறந்த விருந்தோம்பலுக்காக மீண்டும் மீண்டும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்
தேர்தலில் இன்னும் கூடுதலாய் உங்கள் பணி சிறக்கட்டும்! வாழ்த்துகள் தோழர்களே!












No comments:

Post a Comment