.

Monday, March 14, 2016

இலவச சர்வீஸ் SIMல்
தனியார் தொலைபேசிகளை அழைக்கும் வசதி.

BSNL  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாதம் ரூ.200/= இலவச SIMல் தனியார் அலைபேசிகளை அழைக்கும் வசதி தரப்படாமல் இருந்தது. இதனால் நமது தோழர்கள் குறிப்பாக TM தோழர்கள் தனியார் அலைபேசியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை நிலவியது.
இப்பிரச்சினை நமது சங்கத்தால் எழுப்பப்பட்டு JACயின் கோரிக்கையாக மாற்றப்பட்டது. தற்போது இந்த கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 மாதம் ரூ.50/= அளவிற்கு மாநில எல்லைக்குள் தனியார் அலைபேசிகளை  ஊழியர்கள் இலவச சர்வீஸ் SIMல் தொடர்பு கொள்ளலாம் என BSNL  நிர்வாகம் 09/03/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் பரிசீலனை செய்யப்படும். 
இவ்வசதி கிடைக்க செய்த மத்திய சங்கத்திற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.

No comments:

Post a Comment