.

Wednesday, April 13, 2016

செய்திகள்
  • 2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் பணி நியமனம் பெற்ற அனைவரையும் 22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித் தேர்வுக்கு  தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
  • 2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும்பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும்  தேர்வெழுத அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
  • விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
  • BSNL அதிகாரிகளுக்கான POST PAID  செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

       B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...
       A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...
 இலவசமாகப் பேசிக்கொள்ளலாம். அனைத்து அதிகாரிகளுக்கும்  STD       வசதியும்... தேசம் முழுவதும் இலவசமாக ROAMING வசதியும் உண்டு...
  • தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும்  மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA  மாவட்டங்களை 10 வணிகப் பகுதிகளாக BUSINESS AREAவாக  மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின்  கலந்தாலோசனைக்கூட்டம்  நடைபெறலாம்.



No comments:

Post a Comment