.

Saturday, April 23, 2016

செயலகக்கூட்டம் 22-04-2016

செயலகக்கூட்டம் 22-4-2016 மாலை கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், மற்றும் முன்னணித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 29-4-2016 அன்று திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் மாநிலச்செயலர் தோழர் பட்டாபி அவர்கள் கலந்துகொள்ளும் தேர்தல் சிறப்புக்கூட்டத்தையும், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய ஊர்களில் சம்மேளனசெயலர் தோழர் G.ஜெயராமன் அவர்கள் கலந்துகொள்ளும் தேர்தல் சிறப்புக்கூட்டத்தையும் அருகாமையில் உள்ள கிளைகளோடு இணைந்து பெருவாரியான தோழர்களை கலந்து கொள்ளசெய்து சிறப்பாக நடத்திடுமாறு செயலகக்கூட்டதில் வலியுறுத்தப்பட்டது.

கிளைச் செயலர்கள் தேர்தல் நன்கொடையை விரைவில் தோழர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment