.

Sunday, April 10, 2016

தொழிற்சங்க பிதாமகன்
தோழர் ஓம்பிரகாஷ் குப்தா அவர்களின்

95-வது பிறந்தநாள் விழா

கடலூர் மாவட்டத்தில் இன்று அனைத்துக் கிளைகளிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிளைகள் தோறும் தோழரின் திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்துக் கிளைகளிலும் தோழர்கள், தோழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கடலூரில் தோழர் D.துரை அவர்கள் தலைமையில், தோழர் E.விநாயகமூர்த்தி வரவேற்புரை நல்கிட குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ் மிக சிறப்பாக சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களும் உரையாற்றினார். தோழர் S.ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். கடலூர் தோழியர்கள் தையல்நாயகி, தவமணி ஆகியோர்  அளித்த நன்கொடையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது..தோழர் குணசேகரன் வந்திருந்த அனைவருக்கும் பானகம், மோர் வழங்கினார். தோழர்களுக்கு நமது பாராட்டுகள்.






பண்ருட்டி கிளையில் கிளைத்தோழர் G.ரங்கராஜ் தலைமையில் கிளைத்தோழர் முருகன் வரவேற்புரையில் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கிளைத்தோழர் பாஸ்கரன் நன்றியுரையாற்றினார்.





விருத்தாசலத்தில் மாநில அமைப்புசெயலர் தோழர் N .அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு புகழுரையாற்றினார். 






திண்டிவனத்தில் தோழர் G.ஜெயச்சந்தர் தலைமையில் தோழியர் மேனகா சங்கக்கொடியேற்றிட, கிளைச்செயலர் தோழர் R.செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் தோழர் குப்தா அவர்களின் புகழுரையாற்றினார். மற்றும் தோழர் குமார் விளக்கஉரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் V.குப்பன் நன்றியுரையாற்றினார்.




சிதம்பரத்தில் தோழர் K.நாவு தலைமையில் தோழர் இரவிசந்திரன் வரவேற்புரையில் மூத்த தோழர் இஸ்மாயில் துவக்கவுரையில் மாநில உதவிசெயலர் தோழர் தஞ்சை K.நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். AIBSNLEA தோழர் T.விஸ்வலிங்கம், PEWA தோழர் N.மனோகரன் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.




உளுந்தூர்பேட்டையில் தோழர் மணிபாலன் தலைமையில் மாவட்ட உதவிசெயலர் தோழர் D.குழந்தைநாதன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். உடன் மாவட்ட அமைப்புசெயலர்  தோழர் அம்பாயிரம் புகழுரை ஆற்றினார்.




விழுப்புரத்தில் முன்னாள் மாவட்ட செயலர் தோழர் R.சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



செஞ்சியில் கிளைத்தலைவர் தோழர் பால்ராஜ் தலைமையில் தோழர்.V.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.


கள்ளகுறிச்சியில்  தோழர்.பாண்டியன் தலைமையில் மாவட்டத்தலைவர் தோழர்.R. செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட உதவிசெயலர் தோழர் P.அழகிரி அவர்களும் கலந்து கொண்டார்.


நெய்வேலி கிளையில் தோழர் D.மோகன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தோழர் அப்துல்லா பொறுப்பேற்று விழாவினை சிறப்புசெய்தார். 




No comments:

Post a Comment