நீல சாயம் வெளுத்து போச்சு
டும்.. டும்.. டும்.....
போனஸ்
கமிட்டிக் கூட்டம் 30-03-2016 ல் நடைபெற்றது. அந்தக்
கூட்டத்தில் BSNLEU
சங்கம் கலந்து கொள்ளவில்லை. ஆனால்
கூட்டத்தில் நடந்ததாகப் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதனை
உண்மை என்று முட்டு கொடுக்க நாடு முழுவதும் முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் தேதி
ஆர்பாட்டமும், 07-04-2016 ல் தர்ணா போராட்டம் எனக் கூத்துகளை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில், உண்மைகளைப் பட்டவர்த்தனமாக்கும் வகையில் கார்ப்பரேட் அலுவலகம் 06/04/16 ல் BSNLEU
பொதுச் செயலாளருக்குக் கடிதம்
எழுதியுள்ளது. கடிதத்தின் ஆங்கில உண்மை நகல் அப்படியே தோழர்களின் பார்வைக்கு முன் வைப்பதோடு அதன் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்.
பெறுநர்
பொதுச் செயலாளர்,
BSNL
எம்பிளாயிஸ் யூனியன்
புது டெல்லி
பொருள் : போராட்ட
இயக்கங்களுக்கான நோட்டீஸ்
– சம்பந்தமாக
தாங்களும்
மற்ற இருவரும் கையெழுத்திட்ட UF /
1 தேதி 04-04-2016 கடிதம் வரப்பெற்றது. கார்பரேட், மாநில, மாவட்ட அலுவலங்களில்
07-04-2016 ல் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவும் அதைத் தொடர்ந்து நிர்வாகத்துடன் முழுமையாக ஒத்துழையாமை இயக்கங்கள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
2. மே
மாதம் 10 ம் தேதி சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிர்வாகத்தின் பரிசீலனையில்
உள்ள கோரிக்கைகளின் மீது – அதுவும் அந்தக் கோரிக்கைகளின் மீது நிர்வாகம் ஊழியர் சங்கங்களோடு பல கூட்டங்கள் நடத்தி பலசுற்றாக விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் – எந்த வகைப் போராட்ட இயக்கமும் முற்றாகத் தர்க்க ரீதிக்கு எதிரானது, சட்ட விரோதமானது
மற்றும் தேவையில்லாததும் ஆகும்.
3. மேலே
பார்வையில் கண்ட தங்கள் 04-04-2016 கடிதத்தில் CMD
BSNL மற்றும் NFTE இடையே போனஸாக இரண்டு இலக்கத் தொகையைத் திணிப்பதற்கு முடிவு செய்து மறைமுகமாகத் திரைமறைவில் பேரம் எட்டப்பட்டு விட்டதாக மாறுபாட்டுக்கு இடமின்றி ஆணித்தரமான குற்றச்சாட்டை கூறியிருக்கிறீர்கள்.
இந்தக்
குற்றச்சாட்டு முற்றிலுமாக பொருளற்ற நகைப்பிற்கிடமான அபத்தமானதும், உண்மையேதுமில்லாத ஆதாரமற்றதும் ஆகும்.
உங்களுடைய
இந்தக் கூற்றை நிர்வாகம் மிகக் கடுமையானதாக எடுத்துக் கொள்வதுடன் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்குமாறும் உங்களுக்கு அறிவுறுத்துகிறது.
BSNL எம்பிளாயிஸ் யூனியன் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத போது, எப்படி இத்தகைய
இரண்டு இலக்க போனஸ் திணிப்பு என்ற குற்றச்சாட்டை நீங்கள் காட்சிப்படுத்துகிறீர்கள் என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது.
இது
உண்மைக்கு சற்றும் சம்பந்தமில்லாது. ஆனால்
அப்படி உண்மையில்லாத ஒரு செய்தியை ஊர் எல்லாம் வெகுவாகப் பரப்புவதன் மூலம் உங்களது சங்கம் இந்த நிறுவனத்தின் புகழை மட்டமாகக் குறைக்கிறது.
உண்மையில்லாத, சான்றுகளால் ருசுப்படுத்தப்படாத இத்தகைய செய்திகளைப் பொது வெளியில் , பொதுமக்கள் இடையே பரப்புவதிலிருந்து விலகி இருக்குமாறு மீண்டும் ஒருமுறை உங்களது சங்கத்தை அறிவுறுத்துகிறோம்.
எவ்வாறாயினும், PLI குறித்து
எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்பதை இது தொடர்பாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்
போர்டின் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4, ஊழியர் சரிபார்ப்புத்
தேர்தலை நடத்தி முடிப்பதே நம்முன் தற்போதுள்ள பிரதானமான அக்கறைப்பட வேண்டிய விஷயம் – மாறாக, போராட்ட இயக்கங்கள்
அல்ல -- என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒட்டு மொத்த கம்பெனியின் நலன்களைக் கருத்தில் கொண்டும், சரிபார்ப்புத் தேர்தல்
தொடர்பான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டும் மேனேஜ்மெண்ட் சார்பாக உங்களிடம் வேண்டுகிறோம் : போராட்டங்களைக் கைவிட்டு, உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தலைச் சுமுகமாக நடத்திட நிர்வாகத்துடன் ஒத்துழையுங்கள்.
(ஒ-ம்) ராம் ஷக்கல்
கூடுதல் பொது
மேலாளர் (SR)
BSNL
கார்ப்பரேட் அலுவலகம்.
நகல்
1.
CMD, BSNL / Directors
2.
பொதுமேலாளர் (நிர்) BSNL கார்ப்பரேட்
அலுவலகம்
3.
அனைத்துத்
தலைமைப் பொதுமேலாளர்கள் – சூழ்நிலையை எதிர் கொள்ள, வாடிக்கையாளர்
சேவை இடைமுறிவின்றி தொடர தேவையான நடிவடிக்கை எடுத்திட வேண்டப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment