.

Friday, April 1, 2016

நிர்வாகம் மட்டுமல்ல, BSNLEU சங்கமும் ஊழியர்களை முட்டாள்களாக்க . . .
ஏப்ரல் 1, முட்டாள் தினம்

போனஸ் பிரச்சனைக்குத் தீர்வு காண மார்ச் 30 ம் தேதி நிர்வாகம் போனஸ் கமிட்டி கூட்டம் கூட்டியதேதலைவரே நம்ம சங்கம் பேச்சுவார்த்தைக்குப் போகலையா? “BSNLEU சங்கத் தோழர்கள் கேட்பார்களே என்ன பதில் சொல்ல?
  இருக்கவே இருக்கிறது நாடகத்தின் அடுத்த காட்சி என அவசர அவசரமாக ஆர்பாட்டத்திற்கு அறைகூவல் விட்டிருக்கிறது BSNLEU சங்கம்.  பிரச்சனைத் தீர்விற்கு எது இடமோ அந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி கொஞ்சம் கூட எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கென்றே  நாடகத்தின் கடைசி காட்சிஆர்பாட்டத்தோடு ஊத்தி மூடி விடலாம் என்ற நம்பிக்கை
சென்ற கமிட்டி கூட்டங்களில் எந்த வாதங்களை எடுத்து வைக்க கலந்து கொண்டார்கள். . . போனஸ் பெறுவதற்கான தங்களின் யோசனைகள், திட்டங்கள், எந்த விதிகளின் அடிப்படை, பேச்சுவார்த்தையில் கட்டமைக்க விரும்பிய இலக்கு இவை யெல்லாம் பற்றி ஊழியர்களுக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள்.
நிர்வாகம் ஏன், என்ன அடிப்படையில் கூடுதலாகவோ அல்லது மிக அற்பமானதாகவோ போனஸ் தொகையை நிர்ணயித்து தர முன்வந்தார்கள் என்பதை எல்லாம் ஊழியர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டாமா?
பேச்சுவார்த்தையின் இந்த விவரங்களில் எந்த இடத்தில் BSNLEU சங்கம் வேறுபடுகிறதுநிர்ணயிக்கப்படும் தொகை அளவிலா அல்லது நிர்ணயிக்கும் கணக்கீடுகளின் வழிமுறைகளிலாஎதில் BSNLEU சங்கம் வேறுபடுகிறது?
வழிமுறைகளை ஏற்றுக் கொண்டால், அற்பமாக முன்வைக்கப்படும் தொகை அளவை எப்படி மரியாதைக்குரிய தொகையாக உயர்த்துவதற்கான தங்களின் திட்டம்தான் என்ன? சொல்ல வேண்டாமாபுறக்கணிப்பு எப்படி தீர்வாக அமைய முடியும்?
இன்றைய ஆர்பாட்டத்திற்கு பிறகு என்னகேள்வி எழத்தானே செய்கிறதுதேர்தல் முடியும் வரை போனஸ் கமிட்டி புறக்கணிப்பு என்பதுதானா? தேர்தல் முடியும் வரை புறக்கணிப்பு என்பது BSNLEU சங்கத்திற்கு மிக வசதியான புகலிடம்தான்,  NFTE சங்கத்தை வசைபாடிக் கொண்டே காலத்தைக் கழிப்பதற்கு
நிர்வாகமே பேச்சுவார்த்தைக்காக போனஸ் கமிட்டி கூட்டத்திற்கு அழைத்தும் BSNLEU சங்கம் கூட்டத்தைப் புறக்கணிக்கக் காரணம் என்னதீபாவளி பண்டிகைக் காலம் முழுவதும் கல்லுளி மங்கனாய் அமைதி காத்தவர்கள் இப்போது அவசர அவசரமாக போனஸ் ஆர்பாட்டத்திற்கு அறைகூவல் விடுப்பானேன்?
            ஆர்பாட்டத்தில் அவர்கள் ஆவேசமாய் NFTE சங்கத்தை லோ கொட்டேஷன் என்றெல்லாம் திட்டித் தீர்க்கலாம், ஆனால் பாவம் நேற்றைய கூட்டத்தில் உங்கள் பெயரில் கொட்டேஷனே இல்லையே? நேற்றைய கூட்டத்தில் மட்டுமா கொட்டேஷன் இல்லை, ஊதிய மாற்றத்தின் போது அதிகாரிகளின் கொட்டேஷன், NEPP பதவி உயர்வு திட்டத்தில் அமைச்சர் திரு ராஜா மேனேஜ்மெண்ட் அளித்த கொட்டேஷன்,
            BSNLEU சங்கம் பேருக்கு ஆர்பாட்டம் என்ற வித்தைகளைக் காட்டி ஊழியர்களை முட்டாளாக்க எண்ணுகிறதுபிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றலோ ஊழியர்களைக் காக்க வேண்டுமே என்ற செயலூக்கமிக்க உணர்வோ எண்ணவோட்டமோ BSNLEU சங்கத்திற்குக் கிஞ்சித்தும் கிடையாது.
            அதன் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் எப்போதும் உடைப்பது, முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடுவது, குறுக்குசால் ஓட்டுவது ( முதல் தேர்தல் நியாபகம் இருக்கிறதா, குப்தா லோன் என்பதாக பெயர் வந்து விடுமே என்ற பயத்தில் நிர்வாகத்தின் தனிநபர் கடனைத் தடுத்தார்கள், பிறகு அங்கீகாரத்திற்கு வந்தபின் கடனுக்காக நம்மை வங்கிகளிடம் ஓட வைத்தார்கள்…) என்பதாகவே இருந்து வருகிறது.  அதுவே அந்த சங்கத்தின் பழக்கமாகவும் போய்விட்டது.
எனவே காலத்தில் நமது முழக்கம் :
BSNLEU  சங்கத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்
     அவர்களின் ஆர்பாட்ட நாடகம் தேர்தலுக்கு முன் போனஸ் பெறுவதற்காக அல்ல. . . போனஸ் தர மறுக்கும் நிர்வாகத்தை விமர்சனம் செய்ய அல்ல. . .
          NFTE சங்கத்தை வசைபாடுவது , ஊழியர்களைக் குழப்புவது , பிரித்தாளுவது , கூட்டுபேர சக்தியை சீர்குலைப்பது அதன் மூலம் வாக்குகளை சற்று கூடுதலாகப் பெற முடியாதா என்ற நப்பாசை

எனவே, BSNLEU  சங்கத்திடம் எச்சரிக்கையாக இருங்கள் !

No comments:

Post a Comment