.

Thursday, May 12, 2016

வெற்றி!! வெற்றி!!!

நடைபெற்று முடிந்த 7வது சரிபார்ப்பு  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.
கடலூரில் நமது சங்கம் 482 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
BSNLEU 218  வாக்குகள், FNTO 43 வாக்குகளும் பெற்றுள்ளன.

          தமிழகத்தில் 5584 வாக்குகள் ( 46.14%) பெற்று NFTE வெற்றி  பெற்றுள்ளது.
          பெருவாரியாக வாக்களித்து நமது சங்கம் வெற்றி பெறச் செய்த அனைத்து தோழர்கள், தோழியர்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி!.
          அகிலஇந்திய அளவில் NFTE சங்கம் 31.97% வாக்குகள் பெற்று கடந்த முறை இருந்தது போன்ற  அனைத்து அங்கீகாரச் சலுகைகளையும் பெறுகிறது. ( BSNLEU சங்கம் 49.56% பெற்றுள்ளது)
            JCM  14 உறுப்பினர்களில் NFTE இம்முறை 6 உறுப்பினர்களைப் பெற தகுதி பெறுகிறது.

          மீண்டும் அனைத்து தோழர்களுக்கும் நன்றி!  வெற்றிக்கு அயராது பாடுபட்ட நமது சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்களுக்கும் நன்றி!!
தமிழக வெற்றியை பெருமிதத்துடன் கொண்டாடுவோம்!!..
NFTE ஜிந்தாபாத்!
                                                                                                                 வாழ்த்துகளுடன்
மாவட்ட சங்கம், கடலூர்.

No comments:

Post a Comment